
முதல்வர் மருத்துவ காப்பீடு திட்டம் அட்டை வாங்குவது ரொம்ப ஈஸி.. விண்ணப்பிப்பது எப்படி தெரியுமா?
முதலமைச்சர் காப்பீட்டு திட்ட கார்டு வாங்க வேண்டும். அதற்கு எப்படி அப்ளை பண்ணி வாங்க வேண்டும் என்பதை இப்போது பார்ப்போம்.
விபத்து மற்றும் உடல் நலக்குறைவு ஏற்பட்டால் சாமானியர்களும் இலவசமாக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சை பெற முடியும். அதற்கு முதலமைச்சர் காப்பீட்டு திட்ட கார்டு வாங்க வேண்டும். அதற்கு எப்படி அப்ளை பண்ணி வாங்க வேண்டும் என்பதை இப்போது பார்ப்போம்.
உயிர்காக்கும் மருத்துவ சிகிச்சைகளை கட்டணமில்லாமல் ஏழை மற்றும் குறைந்த வருவாய் பெறும் பொதுமக்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பெற வேண்டும் என்ற உயரிய நோக்குடன், உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான முதலமைச்சர் கலைஞர் காப்பீட்டுத் திட்டம் 23.07.2009 அன்று தமிழ்நாடு அரசால் தொடங்கப்பட்டது.
ஒன்றிய அரசின் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டம், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் 23.09.2018 முதல் ஒருங்கிணைந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது இத்திட்டம் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் சுமார் 1.37 கோடி குடும்பங்கள் (ஜனவரி 2022 முதல்) பயன்பெற்று வருகிறார்கள். இத்திட்டத்தில் பச்சிளங் குழந்தைகளுக்கான சிகிச்சை முறை உள்பட 1,090 சிகிச்சை முறைகளும் 8 தொடர் சிகிச்சை வழிமுறைகளுக்கும் மற்றும் 52 பரிசோதனை முறைகளுக்கும் வழி வகை செய்யப்பட்டுள்ளது. 800 அரசு மற்றும் 900 தனியார் மருத்துவமனைகள் சிகிச்சைக்காக அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
52 பரிசோதனை முறை
தமிழ்நாடு முதலமைச்சரின் விரிவான காப்பிட்டுத் திட்டம் அனைத்து மக்களுக்கும் உலகத்தரத்தில் மருத்துவ சேவை வழங்கப்படும். இத்திட்டத்தினால் சுமார் 1.40 கோடி குடும்பங்கள் பயன்பெறுவர். இந்த திட்டத்தில் பச்சிளங்குழந்தைகளுக்கான சிகிச்சை முறை உட்பட 1090 சிகிச்சை முறைகளுக்கும், 8 தொடர் சிகிச்சை வழிமுறைகளுக்கும் மற்றும் 52 பரிசோதனை முறைகளுக்கும் வழிவகை செய்யபட்டுள்ளது. இந்த திட்டம் பச்சிளம் குழந்தைகள் முதல் முதியவர் வரை அனைத்து வயதினரும் பயன் பெறத்தக்க வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது
50000 வரை
பயன்கள் : இத்திட்டத்தின் படி ஒரு குடும்பம் ஒரு ஆண்டிற்கு ரூ.5,00,000/- வரை கட்டணமின்றி அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம். சிகிச்சைக்கான மருத்துவ பட்டியல் இந்த https://www.cmchistn.com/features_ta.php வலைதளத்தில் இணைக்கப்பட்டுள்ளது.
தொலைப்பேசி எண்
உதவி மையம் : இத்திட்டம் பற்றிய விவரங்களை அறிவதற்கும் குறைகளை தெரிவிப்பதற்கும் 24 மணி நேரம் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும் கட்டணமில்லா அழைப்பு மைய தொலைபேசி எண்.1800 425 3993 மூலம் தொடர்பு கொள்ளலாம்.
காப்பீடு திட்டம்
எப்படி பெறுவது: அருகில் இருக்கும் GH க்கு முதலில் போங்க.. காப்பீடு திட்ட கார்டு என்று கேட்டு வாங்கணும் .. ஒரு அப்ளிகேஷன் தருவாங்க. வாங்கி நிரப்பி அதை தங்கள் பகுதி VAO கிட்ட போய் கொடுத்து பரிந்துரை எழுதி வாங்கிக்கோங்க.. குடும்பத்துல இருக்கிற எல்லோரோட ஆதார் மற்றும் ரேசன் கார்டு ஒரிஜினல் மற்றும் நகல் எடுத்து யாரேனும் ஒருவர் செல்லுங்கள். பின் VAO எழுதி சீல் போட்டுத் தரும் அப்ளிகேஷன் ஐ எடுத்து கொண்டு கலெக்டர் அலுவலகம் செல்லுங்கள். அங்கே முதலமைச்சர் காப்பீட்டு திட்ட அறை என்று ஒன்று இருக்கும். அதை கேட்டு அங்கு செல்லுங்கள்
ஒன்று அல்லது இரண்டு மணி நேரத்தில் கார்டு அப்ளை செய்து இலவசமாக கொடுத்து விடுவார்கள். செலவு ஏதும் கிடையதுங்கோ. இந்த முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தில் வருடத்திற்கு ரூபாய் 5 லட்சம் வரை இலவச சிகிச்சைகள் எடுத்து கொள்ளலாம்.
எத்தனை சிகிச்சைகள்
என்னென்ன சிகிச்சை: அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் மற்றும் சில அரசு தேர்வு செய்துள்ள தனியார் மருத்துவ மனைகளிலும் ( காப்பீடு திட்டம் அங்கீகாரம் பெற்ற தனியார் மருத்துவமனை ).CT மற்றும் MRI போன்ற ஸ்கேன்ஸ் 6 மாத இடைவெளியில் இலவசமாக எடுக்கலாம். இதுல ENT சர்ஜ்சரிஸ் ,
கர்ப்பப்பை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், ஆஸ்துமா, டெங்கு, காது பிரச்சனை, இலவச சிசி ஸ்கேன், இலவச எம்ஆர்ஐ ஸ்கேன் எல்லாமே கவர் ஆகும்..எதிர்பாராமல் திடீரென ஏற்படும் தேவைப்படும் நேரத்தில் அங்கும் இங்கும் அலைவதைத் தவிர்த்து இப்பவே அலைந்து காப்பீடு அட்டை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
