
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை வழங்கி, செங்கல்பட்டு POCSO சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு.
அக்டோபர் 10, 2020 ஆம் ஆண்டு, கிண்டி, அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், வசித்து வந்த பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் வீட்டில் இல்லாத நேரத்தில், சிறுமியின் வீட்டின் அருகில் வசித்து வந்த சாமுவேல், வ/34, என்பவர் சிறுமியிடம் அத்துமீறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதுகுறித்து மேற்படி, பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் கொடுத்த புகாரின் பேரில், கிண்டி, அனைத்து மகளிர் காவல் நிலைய குற்ற எண்: 17/2020 ச/பி u/s 6, 10 of the POCSO Act & 376 IPC- 1, 07.10.2020 नं, வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன்விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது, பின்னர் அதிகார வரம்பு காரணமாக இந்த வழக்கு W-6, செம்மஞ்சேரி, அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது.
புலன்விசாரணையின் போது, எதிரி சாமுவேல், வ/34, த/பெ சேகர், எழில் நகர், கண்ணகி நகர், சென்னை-97, என்பவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டார். புலன்விசாரணை துரிதமாக முடிக்கப்பட்டு மேற்படி எதிரி சாமுவேல் மீது நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை 17.03.2021 அன்று, தாக்கல் செய்யப்பட்டது.
இவ்வழக்கானது 16.02.2021 அன்று செங்கல்பட்டு சிறப்பு நீதிமன்றத்தில் POCSO சட்டத்தின்படி, குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்ப்பட்டு, Spl. SC.No.38/2021, வழங்கப்பட்டு நீதிமன்ற விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. நீதிமன்ற விசாரணையின் போது 10 சாட்சிகளை
விசாரணை செய்யப்பட்டு, 18 சான்று ஆவணங்கள் பரிசீலிக்கப்பட்டு, உரிய சட்டப்படி நடைமுறைகள் அனைத்தையும் பின்பற்றி, நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்டவரை, குற்றவாளி என தீர்மானித்து கீழ்கண்ட தண்டனையை (25.10.2025) அன்று வழங்கியுள்ளது.
1) சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக ஆயுள் தண்டனையும் மற்றும் ரூ.1000/- அபராதமும், அபராதம் செலுத்தத் தவறினால், கூடுதலாக 1 ஆண்டுகாலம் சிறை தண்டனை வழங்கப்படும் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
2) பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு நிதியாக ரூ.5,00,000/- (ரூபாய் ஐந்து லட்சம் மட்டும்) வழங்கப்பட்டுள்ளது.




