
கொரனோ காலத்தில் மறைந்த காவலர்களின் இல்லத்திற்கு சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செய்த காவல் அதிகாரிகள்
வருடந்தோறும் அக்டோபர் 21 ந் தேதி தமிழக காவல்துறையில் பணிபுரிந்து மறைந்த காவலர்களுக்கான நீத்தார் நினைவு “காவலர் வீர வணக்க நாளாக” அனுசரித்து மதுரை மாநகர ஆயுதப் படையில் உள்ள நினைவு ஸ்தூபியில் மாவட்ட ஆட்சியர் தென் மண்டல காவல்துறை தலைவர் மற்றும் மதுரை மாநகர காவல் ஆணையர் ஆகியோர் தலைமையில் காவலர்கள் கலந்து கொண்டு மலர் வளையம் வைத்து மரியாதை செய்து வந்தனர்.
இதன் தொடர்ச்சியாக கடந்த 2020, 2021 ஆண்டுகளில் பணியின் போது ஏற்பட்ட கொரானோ பெருந்தொற்று நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி 05.05.2020 அன்று அகால மரணமடைந்த
மதுரை மாநகர் போக்குவரத்து (தெற்கு) பிரிவில் பணிபுரிந்து வந்த தலைமை காவலர் 1871 பரமசாமி என்பவரின் மதுரை அவனியாபுரம் SN கல்லூரி அருகில் ஐயனார் கோவில் தெருவில் உள்ள இல்லத்திற்கு நேரில் சென்ற மதுரை மாநகர காவல் துணை ஆணையர் போக்குவரத்து மற்றும் அவனியாபுரம் போக்குவரத்து காவல் உதவி ஆணையர்
திரு.செல்வின் மற்றும் காவல் ஆய்வாளர்
திரு.லிங்கபாண்டியன் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு தங்கப்பாண்டி ஆகியோர் மறைந்த காவலரின் நினைவை போற்றும் வகையில் அவரின் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தனர்.
அதே போல மதுரை திருப்பரங்குன்றம் போக்குவரத்து பிரிவில் பணிபுரிந்து கடந்த 07.09.2020 அன்று மறைந்த சிறப்பு சார்பு ஆய்வாளர் மலர்ச்சாமி என்பவரின் இல்லத்திற்கு சென்ற காவல்துறை ஆணையர் ஆயுதப் படை மற்றும் காவல் உதவி ஆணையர்கள் திருமதி
சசி பிரியா மற்றும் திரு செல்வின் மற்றும் காவல் ஆய்வாளர்கள் திரு மதுரை வீரன் ஆகியோர் பலத் தூவி மரியாதை செய்தனர். மேலும் உயர்நீதிமன்ற காவல் நிலையத்தில் பணிபுரிந்து
கடந்த 13.08.2020 ஆம் ஆண்டு மரணமடைந்த சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு உமா சங்கர் என்பவரின் மதுரை கோ புதூர் சங்கர் நகரில் உள்ள இல்லத்தில் காவல்துறை ஆணையர் வடக்கு மற்றும் புது காவல் நிலைய ஆய்வாளர் திரு திலீபன் மற்றும் மகிழ்ச்சியும் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் திருமதி விமலா ஆகியோர் நேரில் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி மறைந்த காவலரின் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தனர்.





