Police Department News

காவலர் வீரவணக்க வார மாரத்தான் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மதுரை மாநகர காவல் ஆணையர் பரிசுகள் வழங்கி பாராட்டினார்

காவலர் வீரவணக்க வார மாரத்தான் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மதுரை மாநகர காவல் ஆணையர் பரிசுகள் வழங்கி பாராட்டினார்

கடந்த 26.10.2025 அன்று மதுரை மாநகர் ஆயுதப்படை மைதானத்தில் பணியின் போது மறைந்த காவலர்களுக்கு மரியாதை செய்யும் விதமாக காவலர் வீரவணக்க நாள் நிகழ்ச்சிகளின் தொடர்ச்சியாக நடைபெற்றது அதில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான மாரத்தான் போட்டிகளை மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்கள் கொடி அசைத்து துவக்கி வைத்தார்கள்.

ஆண்கள் மற்றும் பெண்களுக்கு என தனித்தனியாக நடைபெற்ற இந்த மாரத்தான் போட்டிகள் ஆயுதப்படை மைதானத்தில் ஆரம்பித்து ஆண்களுக்கு ஐயர்பங்களா சந்திப்பு வரையிலும் பெண்களுக்கு நாராயணபுரம் வரையிலும் நடைபெற்றது. இதில்
பல்வேறு மாவட்டத்தை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
பெண்களுக்கான மாரத்தான் ஓட்டப் பந்தயத்தில் மதுரை ஆயுதப்படை குடியிருப்பில் வசிக்கும் சுவாதி வயது 24 முதல் இடத்தையும், இரண்டாம் இடத்தை திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த ஐஸ்வர்யா வயது 18, மூன்றாம் இடத்தை கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த சோபியா வயது 21, ஆகியோரும்,
ஆண்களுக்கான போட்டியில் ஊட்டியைச் சேர்ந்த நிகில் வயது 32 என்பவர்
முதல் பரிசையும்,
தஞ்சாவூரை சேர்ந்த கல்லூரி மாணவர் முரளி வயது 18 என்பவர் இரண்டாம் இடத்தையும், திண்டுக்கல் சேர்ந்த டெல்லியில் ராணுவத்தில் பணிபுரியும் கவின்குமார்
வயது 21 என்பவர் மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.

போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத் தொகையாக முதல் இடத்தைப் பிடித்தவர்களுக்கு ரூபாய் 15,000, இரண்டாம் இடத்தை பிடித்தவர்களுக்கு ரூபாய் 10,000/-, மூன்றாம் இடத்தைப் பிடித்தவர்களுக்கு ரூ.5000/- ரொக்க பரிசுத்தொகையும் பதக்கம் மற்றும் சான்றிதழ்களையும் மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்கள் வழங்கி பாராட்டினார்கள்.

இந்த நிகழ்வில் காவல் துணை ஆணையர்கள் தெற்கு மற்றும் ஆயுதப்படை,உதவி ஆணையர்கள், ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published.