
வீட்டில் தனியாக இருந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த 2 நபர்களுக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கி, செங்கல்பட்டு மகிளா நீதிமன்றம் தீர்ப்பு.
செப்டம்பர் 23, 2022-ஆம் ஆண்டு, பள்ளிக்கரணை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், வசித்து வந்த பாதிக்கப்பட்ட பெண், வீட்டில் தனியாக இருந்தபோது, புரசைவாக்கத்தைச் சேர்ந்த எதிரிகள் 1) அற்புதராஜ், வ/29, மற்றும் 2) அருண், வ/31, ஆகிய இருவரும், குளிர்சாதனப் பெட்டியைப் பழுதுபதற்காக வீட்டிற்குள் நுழைந்து, பாதிக்கப்பட்ட பெண் தனியாக இருந்ததைப் பயன்படுத்தி, அப்பெண்ணை வலுக்கட்டாயமாக கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து, அவரிடமிருந்து 20 கிராம் தங்கச் சங்கிலியைக் கொள்ளையடித்ததுடன், கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர்.
இதுகுறித்து மேற்படி, பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் பேரில், : 993/2022, of U/s 450, 342, 323, 354 A, 376 D, 392 & 506 (ii), IPC., 19, 23.09.2022 , வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன்விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது,
புலன்விசாரணையின் போது, எதிரிகள் 1) அற்புதராஜ், வ/29, த/பெ ஆரோக்கியசாமி, R.K. புரம், புரசைவாக்கம், சென்னை-84, மற்றும் 2) அருண், வ/31, த/பெ சண்முகம், பொன்னியம்மன் கோயில் தெரு, புரசைவாக்கம், சென்னை-84, என்பவர்களை 27.09.2022 & 02.10.2022 ஆகிய தேதிகளில் முறையே கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டார் (இதுநாள் வரை ஜாமீன் வழங்கப்படவில்லை). புலன்விசாரணை துரிதமாக முடிக்கப்பட்டு மேற்படி எதிரிகள் மீது நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை 30.12.2022 அன்று, தாக்கல் செய்யப்பட்டது.
இவ்வழக்கானது செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில், குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்ப்பட்டு, Spl. SC.No.26/2023, வழங்கப்பட்டு நீதிமன்ற விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. நீதிமன்ற விசாரணையின் போது 27 சாட்சிகளை விசாரணை செய்யப்பட்டு, 15 சான்று ஆவணங்கள் பரிசீலிக்கப்பட்டு, உரிய சட்டப்படி நடைமுறைகள் அனைத்தையும் பின்பற்றி, நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்டவர்களை, குற்றவாளிகள் என தீர்மானித்து கீழ்கண்ட தண்டனையை (28.10.2025) அன்று வழங்கியுள்ளது.
வ எண்
இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு
வழங்கப்பட்ட தண்டனை (கடுங்காவல் சிறை)
விதிக்கப்பட்ட அபராதம்
அபராதம் செலுத்தத் தவறினால்
1.Sec 376 D20 ஆண்டுகள் Rs.10,000/-6Month
2.Sec 450 10 ஆண்டுகள்Rs.2,000/-3 Months
3.Sec 392 r/w 3410 ஆண்டுகள் Rs.2,000/-6 Months
4.Sec 342 1 ஆண்டுRs.500/-1 Month
5.Sec 323 1 ஆண்டு Rs.500/-1 Month
6.Sec 354(A)1 ஆண்டு Rs.500/-1 Month
7.Sec 506(2) 2 ஆண்டுகள் Rs.1,000/-3Months





