
மானாமதுரை ரயில் நிலைய கிட்டங்கியில் பொருட்கள் திருட்டு மூவர் கைது
கடந்த 02.11.25 ம் தேதி மானாமதுரை ரயில் நிலையத்திற்கு எதிரில் உள்ள ரயில்வே கிட்டங்கியில் செம்பு வயர்கள் மற்றும் ரயில்வேக்கு சொந்தமான பொருட்களை சிலர் திருடிக்கொண்டிருக்கும் போது அவர்களை கையும் களவுமாக ரயில்வே பாதுகாப்பு படையினர் பிடித்தனர். அவர்களை விசாரணை செய்த போது அவர்கள் மானா மதுரை சேர்ந்த கூடலிங்கம் மகன் நவநீதகிருஷ்ணன் வயது 22, மானாமதுரை சேர்ந்த உடையார் மகன் உதயராகவன் வயது 19, மற்றும் மானாமதுரை சேர்ந்த கணேசன் மகன் தனுஷ் வயது 17 என தெரிய வந்தது இவர்கள் 10,796,50/ ரூபாய் மதிப்புள்ள 43.17 மீட்டர் நீளமுள்ள செம்பு கேபிள் வயர்களை திருடிக் கொண்டிருக்கும் பொழுது அந்த வழியே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ரயில்வே பாதுகாப்பு படை சப் இன்ஸ்பெக்டர் சம்பத்குமார், வேல்முருகன் ஜெயக்குமார் கான்ஸ்டபிள் குற்ற நுண்ணறிவுப் பிரிவு திரு கோட்டைச்சாமி காவலர் திரு விஜய் ராஜா காவலர் சிஐபி மற்றும் ஆர் பி எப் காவலர் விக்னேஸ்வரன் ஆகியோர் அவர்களை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர்.
அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்


                            


