Police Recruitment

மதுரையில் 37வது தேசிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

மதுரையில் 37வது தேசிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

மதுரையில் 37 வது தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு மதுரை  மாநகர போக்குவரத்து காவல் துறையினர் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் மாணவ மாணவியர்களுக்கு பல்வேறு நிகழ்சிகள் மூலம் போக்குவரத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்
அந்த வகையில் இன்று முதலுதவி சமூக நல அறக்கட்டளை,
மற்றும் அறந்தாங்கி நிஷா
அன்பு அறக்கட்டளை இணைந்து
மதுரை காமராஜர் சாலை பகுதியில் உள்ள குருவிக்காரன் சாலை சிக்னல் அருகில்  சாலை விதிகளை முறையாகப் பின்பற்றி இருசக்கர வாகனத்தில் வருபவர்கள் தலைக்கவசம் அணிந்தும்
நான்கு சக்கர வாகனத்தில் வருவார்கள் சீட் பெல்ட் அணிந்தும்
முறையாக போக்குவரத்து விதிகளை பின்பற்றி வந்த வாகன ஓட்டிகளுக்கு திருக்குறள் புத்தகம் மற்றும் இனிப்புகள் வழங்கி அவர்களை ஊக்கப்படுத்தினர்
இந்த நிகழ்வினை மதுரை தல்லாகுளம் போக்குவரத்து
உதவி ஆணையர் இளமாறன் அவர்கள் தலைமையில் திலகர் திடல் போக்குவரத்து காவல் ஆய்வாளர் தங்கமணி மற்றும் போக்குவரத்து காவலர்கள் ஆகியோர்கள் வழங்கினார்கள் இந்நிகழ்வில்
சமூக ஆர்வலர் சக்தி முருகன்,
முதலுதவி சமூக நல அறக்கட்டளையின் மாநிலத் துணைத் தலைவர்
செய்யது ரியாஸ் கான் மற்றும் மாநில பொதுச் செயலாளர் மற்றும் அறந்தாங்கி நிஷா அன்பு அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் முனைவர் முபின் ஆகியோர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு சாலைபாதுகாப்பு குறித்த விழிப்புணர்வுகளை வழங்கினர்

Leave a Reply

Your email address will not be published.