Police Recruitment

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு போலீசாரின் கொடி அணிவகுப்பு

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு போலீசாரின் கொடி அணிவகுப்பு

வரவிருக்கின்ற சட்டமன்றத்தேர்தல் 2026 முன்னிட்டு, மக்களாட்சியை வலுப்படுத்திட அனைவரும் வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைக்கும் விதமாகவும்,
பொதுமக்கள் சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் ஜனநாயக கடமையை நிறைவேற்றவும் ,
மதுரை மாநகர காவல் சார்பாக, மாநகர காவல் ஆணையர் அவர்களின் உத்தரவின் படி, இன்று மார்ச் 10. 2026 , கொடி அணிவகுப்பு ஊர்வலமானது மதுரை மாநகர் சிம்மக்கல் பகுதியிலிருந்து ஓபுளா படித்துறை பகுதி வரை மற்றும் பீ.பீ.குளம் சந்திப்பு முதல் கோரிப்பாளையம் சந்திப்பு வரையுள்ள பகுதிகளில் நடைபெற்றது. இக்கொடி அணிவகுப்பில் காவல் சரக உதவி ஆணையர்கள் ,காவல் ஆய்வாளர்கள், ஆளிநர்கள் மற்றும் மத்திய சேம காவல் படையினர் என 300 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published.