தஞ்சாவூர்: கும்பகோணம் அடுத்துள்ள சுவாமிமலை காவல் நிலைய சரகத்திற்க்குட்பட்ட உத்திரை கிராமம் மெயின் ரோடு விநாயகர் கோவில் அருகில் வசித்து வரும் பழனிசாமி மகன் ரஜினிகாந்த் (30) என்பவர் தனது வீட்டில் மது பாட்டில்களை விற்பனை செய்வதாக வந்த தகவல் அடிப்படையில் சுவாமிமலை காவல் நிலைய ஆய்வாளர் ரேகாராணி உத்திரவின் படி உதவி ஆய்வாளர் குகன் மற்றும் காவலர்கள் நேரில் சென்று விசாரணை நடத்தினர்கள் விசாரணையில் அங்கு மது விற்பனை செய்து வருவது தெரியவந்தது இதையடுத்து சுவாமிமலை காவல் துறையினர் அவர் மீது வழக்கு பதிவு செய்தர்கள் மேலும் அவரிடம் இருந்த 15 மது பாட்டில்கள்களை பறிமுதல் செய்து மது விற்ற ரஜினிகாந்தை கைது செய்தனர்.
