ரூ.20 கோடி மதிப்புள்ள சிலைகள் பறிமுதல்
சிலை திருட்டு தடுப்பு பிரிவின் சிறப்பு புலனாய்வுக் குழுவிற்கு தொன்மையான சிலைகள் விற்பனை செய்ய இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில்¸ சிலை திருட்டு தடுப்பு பிரிவின் கூடுதல் காவல்துறை இயக்குநர் திரு. அபய்குமார் சிங்.¸ இ.கா.ப மற்றும் சிலை திருட்டு தடுப்பு பிரிவின் காவல்துறை தலைவர் திரு. அன்பு.¸ இ.கா.ப ஆகியோரின் உத்தரவின் பேரில்¸ 04.02.2020ம் தேதியன்று கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. இராஜாராம் அவர்கள் தலைமையில்¸ புதுக்கோட்டை விரைந்த சிலை திருட்டு தடுப்பு பிரிவினர் வெள்ளைச்சாமி¸ அரவிந்த்¸ குமார்¸ மதியழகன் ஆகிய 4 பேரை கைது செய்து¸ அவர்களிடமிருந்து சுமார் ரூ.20 கோடி மதிப்புள்ள 5 பஞ்ச லோக சிலைகள்¸ 1 பீடம் மற்றும் 3 இருசக்கர வாகனங்கள் கைப்பற்றப்பட்டது.