சென்னை: ‘காவல்துறை பொதுமக்களின் நண்பன்’ என்ற சொல்லிற்கேற்ப சென்னை பெருநகரக் காவல் ஆணையாளர் அவர்களின் நல்லிணக்க முயற்சியாக, பொதுமக்களுக்கும் காவல்துறைக்குமான உறவை மேம்படுத்தும் வகையில் மாங்காடு காவல் நிலையத்துக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள கோவூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியின் சுற்றுச்சுவர்களில் தேசத்தலைவர்களின் படங்கள், ஓவியங்கள் மற்றும் பொதுமக்களுக்கு போக்குவரத்து விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சிறந்த வாசகங்கள் ஆகியவற்றை சென்னை பெருநகரக் காவலின் நுண்ணறிவுப் பிரிவைச் சேர்ந்த காவலர்கள் திரு. R. மதுசூதனன் மற்றும் திரு. S. காமராஜ் ஆகியோர் பல வண்ணங்களில் வரைந்துள்ளனர்.
மேற்படி சுற்றுச்சுவரை பார்க்கும் அப்பகுதி பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சென்னை பெருநகரக் காவல்துறையின் இந்த முயற்சியை பாராட்டி வருகின்றனர். அரசு பள்ளியின் சுற்றுச்சுவரை வண்ணங்களால் அழகுபடுத்திய நுண்ணறிவு பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு சென்னை பெருநகரக் காவல் ஆணையாளர் முனைவர் . A.K. விஸ்வநாதன் IPS அவர்கள் தனது பாராட்டுகளை தெரிவித்தார்.