Police Department News

மதுரை மாவட்டத்தில் குற்ற வழக்குகளில் பறிமுதலான வாகனங்கள் ஏலம்அந்த பணம் அரசு கணக்கில் செலுத்தப்படும்.

மதுரை மாவட்டத்தில் குற்ற வழக்குகளில் பறிமுதலான வாகனங்கள் ஏலம்
அந்த பணம் அரசு கணக்கில் செலுத்தப்படும்.

மதுரை மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு (தலைமையிடம்) விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மதுரை மாவட்டத்தில் மது கடத்தலில் ஈடுபட்டு பறிமுதல் செய்யப்பட்டு அரசுடைமையாக்கப்பட்ட வாகனங்களை தமிழ்நாடு மதுவிலக்கு சட்டத்தின் படி பொது ஏலம் விடப்படுகிறது.

இந்த ஏலம் வருகிற 27-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் நடைபெறுகிறது. இதில் கலந்து கொண்டு வாகனங்களை ஏலத்தில் எடுக்க விருப்பமுள்ளவர்கள் மாவட்ட காவல் அலுவலகத்தில் ஏலம் விட நிறுத்திவைக்கப்பட்டுள்ள 105 வாகனங்களை 23, 24 ஆகிய இரு தினங்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை பார்வையிட்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.

ஏலத்தில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் இரு சக்கரவாகனத்திற்கு முன்பதிவாக ரூ.5 ஆயிரம், 4 சக்கர வாகனத்துக்கு ரூ: 10ஆயிரம் செலுத்த வேண்டும். வாகனத்கை ஏலம் எடுத்தவர்கள் அந்த வாகனத்தின் ஏலத்தொகையை அன்றைய தினமே கட்டி வாகனத்தை பெற்றுக் கொள்ளவேண்டும்.

மேலும் வாகனத்தை ஏலம் எடுத்து முழுப்பணம் கட்டி வாகனத்தை எடுக்காதவர்களின் முன்பணம் திருப்பித் தரபடமாட்டாது. அந்த பணம் அரசு கணக்கில் செலுத்தப்படும். ஏலம் எடுத்த வாகனத்திற்கு விதிக்கப்படும் ஜி.எஸ்.டி. வரியும் ஏலத்தொகையுடன் சேர்த்து வசூலிக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published.