மதுரை: மதுரை மாநகர் கீரைத்துரை குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி.ரெஜினா அவர்கள் சார்பில் அருப்புகோட்டை நாடார் உயர்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு சமூக குற்றங்களிலிருந்து தற்காத்துக் கொள்ளுதல் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாப்பு சட்டம் (POCSO ACT) பற்றிய விளக்கம், சிறார்கொடுமை, குழந்தைக் கடத்தல், குழந்தை தொழிலாளர்கள் ஒழிப்புமுறை, இணையதள பயன்பாடு (முகநூல், வாட்ஸ்-அப்) மற்றும் இணையதள குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு கொடுக்கப்பட்டன. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் 2600 மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்
