செய்வதறியாது தவித்த முதியவரை முதியோர் இல்லத்தில் ஒப்படைத்த காவல்துறையினர்
கோவை மாவட்டம் வடவள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 29.03.2020-ம் தேதியன்று நீண்ட நேரம் செய்வதறியாது தனியாக நின்று கொண்டிருந்த முதியவரை அங்கு கண்காணிப்பு பணியில் இருந்த காவலர்கள் விசாரித்ததில் தான் சன்யாசம் வந்திருப்பதாகவும் தற்போது எங்கு செல்வது என்று தெரியவில்லை எனக் கூறியதையடுத்து காவல்துறையினர் அம்முதியவரை மீட்டு அருகில் இருந்த முதியோர் இல்லத்திற்கு பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.