Police Department News

மதுரை மாநகரில் ரவுடிகளை கட்டுப்படுத்த மாநகர காவல் துறையினரின் அதிரடி நடவடிக்கை

மதுரை மாநகரில் ரவுடிகளை கட்டுப்படுத்த மாநகர காவல் துறையினரின் அதிரடி நடவடிக்கை

மதுரை மாநகரில் ரவுடிகளின் நடவடிக்கைகளை முழுவதுமாக கட்டுப்படுத்துதற்காகவும் மற்றும் கொடுங்குற்றங்கள் நடைபெறாமல் முன் கூட்டியே தடுப்பதற்காகவும் ஆயுதம் ஏந்திய காவலர்கள் ரோந்து செல்வதற்காக 14 இரண்டு சக்கர ரோந்து வாகங்களை இன்று மதுரை மாநகர காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா அவர்கள் மதுரை மாநகர காவல் அலுவலகத்திலிருந்து கொடியசைத்து துவக்கி வைத்தார்.

ஆயுதம் ஏந்திய காவலர்கள் ரவுடிகளின் நடமாட்டம் உள்ள மற்றும் கொடுங்குற்றங்கள் நடைபெற வாய்புள்ள பகுதிகளில் பொது மக்களுக்கு பாதுகாப்பாக ரோந்து பணியில் ஈடுபட்டு தொடர்ந்து கண்காணிப்பார்கள். ரவுடிகளின் நடவடிக்கை குறித்து தகவல் கிடைத்தவுடன் தாமதமின்றி சம்பந்தப்பட்ட இடங்களுக்கு உடனே சென்று அவர்களை உடனடியாக பிடிப்பதற்காகவும் மற்றும் அவர்களது நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்காகவும் தவிர்க முடியாத சந்தர்பங்களில் பாதுகாப்பான முறையில் ஆயுத பிரயோகம் செய்வதற்காகவும் காவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

மதுரை மாநகரில் ரோந்து வாகனங்களின் ஏண்ணிக்கை மொத்தம் 67 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த ரோந்து வாகனங்கள் மதுரை மாநகரில் உள்ள ரவுடிகளின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்கும், சட்டம் மற்றும் ஒழுங்கை பராமரிப்பதற்கும் மற்றும் பொது மக்களை பாதுகாத்திடவும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் மாநகர காவல் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published.