ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபாவின் அலுவலகத்துக்கு நேற்று முன்தினம் நள்ளிரவு 3 ஆட்டோக்களில் சில மர்ம நபர்கள் வந்தனர். அவர்கள், தீபா பேரவை அலுவலகம் மற்றும் வீடு மீது கற்களை வீசினர். இதைப் பார்த்த அங்கிருந்த காவலாளிகள் ஆட்டோவை நோக்கி ஓடி வந்தனர். உடனே ஆட்டோவில் வந்த நபர்கள், ஆட்டோவிலேயே தப்பிச் சென்றனர். இது குறித்து தீபா பேரவை சார்பில் மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
