வடக்கு மண்டல காவல்துறைத் தலைவர் திரு. நாகராஜன் இ. கா. ப. அவர்கள், வேலூர் காவல் துணை தலைவர் திருமதி. காமினி, இ. கா. ப, மற்றும் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. பிரவேஷ் குமார் இ. கா. ப ஆகியோர் இன்று கொரோனா வைரஸ் தொற்றால் தடைசெய்யப்பட்ட பகுதிகளாக கருகம்பத்தூர், சைதாப்பேட்டை, கஸ்பா, கொணவட்டம், ஆகிய இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
