காஞ்சிபுரம் ஒலிமுகமது பேட்டையில்144 தடை உத்தரவை மீறி இறைச்சி கடையைத் திறந்து நூற்றுக்கும் மேற்பட்டோரை சேர்த்ததால் அந்த கடையை டிஎஸ்பி கலைச்செல்வன் மற்றும் ஆய்வாளர் நடராஜன் முன்னிலையில் நகராட்சியினர் சீல் வைத்தனர்
தற்போது நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது இந்த சூழ்நிலையில் அத்தியாவசிய பொருட்களை தவிர்த்து மற்ற அனைத்து கடைகள் மூடி இருக்கும் நிலையில்
இறைச்சிக் கடைகளுக்கு மறு உத்தரவு வரும் வரை திறக்க வேண்டாம் என்ற சூழ்நிலையில் ஒலிமுகம்மது பேட்டையில் இறைச்சி கடையைதிறந்து நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கூட்டம் சேர்ந்தனர் இதனால் சமூக இடைவெளி பின்பற்றாமல் இருந்த நிலையில் தகவலறிந்து டி.எஸ்.பி கலைச்செல்வன் அவர்களுடன் காவல் ஆய்வாளர் நடராஜன் முன்னிலையில் நகராட்சியினர் கடைக்கு சீல் வைத்தனர்
மேலும் கடை உரிமையாளரிடம் எச்சரிக்கை விடுத்து சாவியை பறிமுதல் செய்தனர்
போலீஸ் இ நியூஸ் செய்திகளுக்காக
காஞ்சிபுரம் மாவட்ட செய்தியாளர்
ம.சசி