சேலம்: சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே சேசஞ்சாவடி பக்கமுள்ள மைக்ரோ ஸ்டேசன் பஸ்நிறுத்தம் அருகே அரசு டாஸ்மாக் கடை உள்ளது. அந்த கடையை ஒட்டியுள்ள சேலம் – விருத்தாசலம் ரெயில்வே தண்டவாளத்தில் ஒரு வாலிபர் பிணம் கிடப்பதாக வாழப்பாடி காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து வாழப்பாடி துணை காவல் கண்காணிப்பாளர் சூர்யமூர்த்திஇ வாழப்பாடி ஆய்வாளர் உமாசங்கர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். ரெயில் தண்டவாளத்தில் உடல் கிடந்ததால் சேலம் சூரமங்கலம் ரெயில்வே காவல் ஆய்வாளர் இளவரசி தலைமையிலான ரெயில்வே காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
சேலம் சூரமங்கலம் ரெயில்வே காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியானது. பிணமாக கிடந்தவர்இ வாழப்பாடி அருகே உள்ள முத்தம்பட்டி சி.எஸ்.சி. நகர் பகுதியைச்சேர்ந்த விஜயன் என்ற விஜயகுமார் (29) என்பது தெரியவந்தது. விஜயனுக்கு பெற்றோர்கள் இல்லை. இவர் கடந்த 2007-ம் ஆண்டு முதல் சேலம்இ வாழப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகள் மற்றும் வீடுகளில் திருடிய வழக்கில் பலமுறை போலீசில் சிக்கியுள்ளார் என்பது தெரியவந்தது.
பிரபல கொள்ளையனான இவர் மீது வாழப்பாடிஇ சேலம் அம்மாபேட்டைஇ செவ்வாய்பேட்டைஇ சேலம் அரசு மருத்துவமனை காவல் நிலையம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் இதுவரை 16 திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் கொள்ளை வழக்கில் கைதாகி சிறையில் இருந்து விட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் விஜயன் வீடு திரும்பியுள்ளார்.
இந்த நிலையில் விஜயன் தண்டவாளத்தில் பிணமாக கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தண்டவாளத்தில் விஜயனின் தலை நசுங்கி உள்ளது. மேலும் உடல் மீது ரத்தம் உறைந்துள்ளது. ஆனால் ரெயிலில் அடிபட்டதற்கான எந்தவித அடையாளமும் இல்லைஇ என ரெயில்வே காவல்துறையினர் தெரிவித்தனர்.
எனவே விஜயனை வேறு எங்காவது ஒரு இடத்தில் கொலை செய்து உடலை தூக்கி வந்து தண்டவாளத்தில் வீசியிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். விஜயனுக்கும்இ சிலருக்கும் கடந்த 2 நாட்களுக்கு முன்பு டாஸ்மாக் கடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில் ஈடுபட்டவர்கள் யாராவது விஜயனை கொலை செய்து தண்டவாளத்தில் வீசினார்களா? அல்லது வேறு இடத்தில் வைத்து கொலை செய்தார்களா? இதற்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.