திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சிபி.சக்கரவர்த்தி IPS., அவர்களின் உத்தரவுப்படி, தலைமையில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திருT.அசோக் குமார் அவர்களின் மேற்பார்வையில்,போளூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு M.குணசேகரன் அவர்களின் தலைமையில், போளூர் காவல் நிலைய ஆய்வாளர் திரு.P.அருண்குமார் மற்றும் போலீசார் இணைந்து ஜமுனாமரத்தூர் வேட கொல்லைமேடு, நாகநதி ஆத்துப்பாலம், நீப்பார்பட்டு கூட் ரோடு போன்ற இடங்களில் நடத்திய மதுவிலக்கு அதிரடி சோதனையில் 152 லிட்டர் சாராயம் கடத்திய 1)உமாபதி, வயது 37, S/O.கார்த்திகேயன், மேட்டுக்குடிசை, ஆரணி தாலுக்கா, 2)பாஸ்கரன், வயது 27, S/O.சின்ன குழந்தை, சைதாப்பேட்டை, ஆரணி தாலுக்கா, 3)மணிகண்டன், வயது 25, S/O.பிச்சாண்டி, மணியம்பட்டு, ஆரணி தாலுக்கா, 4)சிவா, வயது 32, S/O.தரணி, பையூர், ஆரணி தாலுக்கா, 5)விநாயகம், வயது38, S/O.குப்பன், பத்திவாடி கிராமம், வாலாஜா தாலுக்கா, ராணிப்பேட்டை மாவட்டம். 6)திருமலை, வயது 27, தம்கல்லூர் கிராமம், பலாமத்தூர் அஞ்சல். 7)கணேஷ், வயது 24, S/O.ராமன், வக்கீல் தெரு, ராணிப்பேட்டை. 8)மேகணேஸ்வரன், வயது 29, S/O.ஓமியோபதி, முள்நின்றம் கிராமம், ஆரணி தாலுக்கா. 9)கணேசன், வயது 45, S/O செல்வராஜ், பையூர், ஆரணி தாலுக்கா, 11)ராஜேஷ், வயது 24, S/O.முருகன், சலாம் பேட்டை, வேலூர் என்பவர்களை ஜமுனாமரத்தூர் போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பினர். மேலும் தப்பியோடிய ராஜா என்பவரை தேடி வருகின்றனர். கடத்தலுக்கு பயன்படுத்திய 11 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் செங்குணம் பகுதியில் நடத்திய மதுவிலக்கு தேடுதல் வேட்டையில் 55 லிட்டர் சாராயம் விற்பனைக்காக வைத்திருந்த கவுஸ்பாஷா, வயது 30, S/O.ஜாபர்சாய்பு, செங்குணம் கிராமம், போளூர் தாலுக்கா என்பவரை போளூர் போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பினர். கடலாடி காவல் ஆய்வாளர் திருமதி.M.ஆதிலட்சுமி மற்றும் போலீசார் இணைந்து மேல்சோழங்குப்பம் பகுதியில் மதுவிலக்கு அதிரடி சோதனை நடத்தியபோது 90 லிட்டர் சாராயம் விற்பனைக்காக வைத்திருந்த பலராமன், வயது 30, S/O.சதாசிவம் மேல்சோழங்குப்பம், போளூர் தாலுக்கா என்பவரை கைது செய்து கடலாடி போலீசார் நீதிமன்ற காவலுக்கு அனுப்பினர். மேலும் வந்தவாசி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.P.தங்கராமன் அவர்களின் தலைமையில், வடவணக்கம்படி காவல் ஆய்வாளர் திருமதி.B.கௌரி மற்றும் போலீசார் இணைந்து கொளக்கரவாடி பகுதியில் நடத்திய மதுவிலக்கு அதிரடி சோதனையில் 65 லிட்டர் கள்ளச்சாராயம் விற்பனைக்காக கடத்திய 1)பிரகாஷ், வயது 29, S/O.ராமச்சந்திரன், 2)குமரேசன், வயது 27, S/O.கிருஷ்ணமூர்த்தி இருவரும் கொளக்கரவாடி, வந்தவாசி தாலுக்கா என்பவர்களை வடவணக்கம்படி போலீசார் கைதுசெய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பினர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய ஒரு இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்துள்ளனர்.தெள்ளார் காவல் ஆய்வாளர் திருமதி.M.அல்லிராணி மற்றும் போலீசார் இணைந்து கீழ்செம்பேடு பகுதியில் நடத்திய தேடுதல் வேட்டையில் 15 லிட்டர் கள்ளச்சாராயம் விற்பனைக்காக வைத்திருந்த தேவேந்திரன், வயது 55, S/O.நடேசன், கீழ்செம்பேடு, வந்தவாசி தாலுக்கா என்பவரை கைது செய்து வெள்ளாளர் போலீசார் நீதிமன்ற காவலுக்கு அனுப்பினர்.மேலும் திருவண்ணாமலை நகர உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.K.அண்ணாதுரை அவர்களின் தலைமையில் கீழ்பெண்ணாத்தூர் காவல் ஆய்வாளர் திருமதி மகாலட்சுமி மற்றும் போலீசார் இணைந்து நடத்திய தேடுதல் வேட்டையில் 55 லிட்டர் கள்ளச்சாராயம் விற்பனைக்கு வைத்திருந்த விஜய், வயது 23, S/O.முனுசாமி, வழுதலங்குணம் கிராமம், கீழ்பெண்ணாத்தூர் தாலுக்கா என்பவரை கைது செய்து கீழ்பெண்ணாத்தூர் போலீசார் நீதிமன்ற காவலுக்கு அனுப்பினர்.
