விருதுநகர் மாவட்டம்:-
எங்கேயும் எந்தசூழ்நிலையும், ஊர்வலம், போராட்டம், எந்தப்பிரச்சினையாக இருந்தாலும் முதலில் முன்நிற்பது காக்கிசட்டைகாரர்களான காவல் துறைதான்.
கண்ணுக்குத்தெரிந்த எதிரிகளோ வேறு எதுவாக இருந்தாலும் திறம்பட செயலாற்றுவர் நமது காவல் துறை.
ஆனால் கண்ணுக்குத்தெரியாத உயிர்கொல்லியை எந்த ஒரு ஜாம்பவான்கள் ஆனாலும் இதில் ஜெயிக்கமுடியாது.
ஆனாலும் மக்கள் பணியில் கொரோனா ஒழிப்பு பணியில் பெரும்பங்காற்றி வந்த தமிழக காவல் துறையில் சென்னையை சேர்ந்த மேற்கு மாம்பல ஆய்வாளர் திரு.பாலமுரளி அவர்கள் நோய்தொற்று காரணமாக மருத்துவமனையில் சேர்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.
இதனால் காவல் துறையினர் மத்தியில் பெரும்பரபரப்பு நிலவிவருகின்றது.
ஆனால் அதையும் பொருட்படுத்தாமல் காவல் துறையானது தைரியமாகவும், துணிவுடனும் களம் கண்டுவருகிறது.
தன்னுடன் இணைந்து பணியாற்றிய சக காவல் துறை அதிகாரிகள் மற்றும் காவலர்களென ஒட்டுமொத்த துறையும் உயிரிழந்த சென்னை மேற்கு மாம்பலம் ஆய்வாளர் திரு.பாலமுரளி அவர்களுக்கு மரியாதை செலுத்திவருகின்றனர்.
அந்த வரிசையில் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை சப்டிவிசனில் பணியாற்றிவரும் அனைத்து காவல்நிலையத்தில் உயிர்நீத்த ஆய்வாளருக்கு மரியாதை செலுத்தினர்.
இந்த மரியாதை செலுத்தும் பணியில் அருப்புக்கோட்டை காவல்துணை கண்காணிப்பாளர் திரு.வெங்கடேசன் மற்றும் அருப்புக்கோட்டை நகர்காவல்நிலையம் , அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் காவல்நிலையம், அருப்புக்கோட்டை தாலுகா காவல்நிலையம், பந்தல்குடிகாவல்நிலையம்,காரியாபட்டி காவல்நிலையம், ஆவியூர்காவல்நிலையம் என அதிகாரிகள், சார்புஆய்வாளர்கள்,சிறப்பு சார்பு ஆய்வாளர்கள், காவலர்கள் அனைவரும் மரியாதை செலுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Police e News செய்திகளுக்காக
VRK.ஜெயராமன்MA,Mphil மாநிலசெய்தியாளர்
அருப்புக்கோட்டை-626101, விருதுநகர் மாவட்டம்