குற்றங்களை குறைக்க ஈரோட்டு பார்முலாவை கடைபிடிப்பாரா புதிய மதுரை காவல் துணை ஆணையர், மக்கள் எதிர்பார்பு
மதுரை மாநகர சட்டம் ஒழுங்கு துணை ஆணையராக திரு தங்கத்துறை அவர்கள் நியமிக்கப்பட்டு பொறுப் பேற்றுக்கொண்டார். இவர் இதற்கு முன்பு ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்ரண்டாக பணியாற்றினார். இவர் போலீஸ் பொதுமக்கள் நல்லுறவை ஏற்படுத்தும் வகையிலும் குற்றச் சம்பவங்களை தடுக்கும் வகையிலும் ஈரோடு மாவட்டம் முழுவதிலும் ஒவ்வொரு பகுதியிலும் கிராம கண்காணிப்பு அலுவலர்களை நியமித்தார், அவர்களின் பெயர் விபரம் மற்றும் செல் போன் நம்பர் விபரங்களை விளம்பர பலகைகளில் வைக்கப்பட்டன. இது தவிர அந்தப் பகுதிகளுக்கு உரிய காவல் நிலையங்களின்
செல் போன் நம்பர்கள் உயர் அதிகாரிகளின் செல் போன் எண்களும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கும், விழிப்புணர்வு காவல் சிறப்பு அலுவலர்கள் தினமும் அந்தந்த பகுதிகளில் வசிக்கும் மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்வார்கள் குடும்ப பிரச்சனை, நிலத்தகராறு, பாலியல் தொந்தரவு உட்பட எந்த பிரச்சனையாக இருந்தாலும் சிறப்பு அலுவலர்களிடம் கூறலாம். இதற்கு உடனடியாக தீர்வு காணப்படும் இது ஈரோடு மாவட்டத்தில் குற்றங்கனை குறைக்க மிகவும் உதவியாக இருந்தது. மதுரை மாநகர சட்டம் ஒழுங்கு துணை ஆணையராக பொறுப்பேற்றிருக்கும் இவர் மதுரையிலும் இந்த பார்முலாவை அமலுக்கு கொண்டு வருவாரா? என்ற எதிர்பார்ப்பு மதுரை மாநகர பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.