மூதாட்டியை ஏமாற்றி தங்க நகை பறிப்பு
Law: IPC 420
மதுரை மாநகர சுப்ரமணியபுரம்,C2. காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதி பழங்காநத்தம், பசும்பொன் நகர், இந்திரா காந்தி தெருவில் வசித்து வரும் வருதம்மாள் வயது 70/20,W/O.ஜெயராம்(Late). இவர் சம்பவத்தன்று காலை 11 மணியளவில் பசும் பொன் நகரில் உள்ள ரேஷன் கடையில் பொருட்கள் வாங்கி விட்டு இந்திரா காந்தி தெரு வழியாக வீட்டிற்கு நடந்து வரும் போது இரண்டு நபர்கள் வந்து அதில் ஒரு நபர் தான் மப்டி போலீஸ் எனவும் நகையெல்லாம் அணிந்து கொண்டு இந்தப் பக்கம் போகக் கூடாது, நகையை கழட்டி கொடு , அதை பேப்பரில் வைத்து மடித்து தருகிறேன் என்று கூறி, அவர் அணிந்திருந்த 2 பவுன் தங்கச் சங்கிலியை வாங்கி ஒரு பேப்பரில் வைத்து மடித்து கொடுக்க அதை வாங்கி பையில் வைத்துக் கொண்டு வீட்டிற்கு சென்று பார்த்த பொது , அந்த பொட்டலத்தில் நகைக்குப் பதில் சிறு சிறு கற்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இந்த விசயத்தை தனது மூத்த மகன் ராதாகிருஷ்ணன் வீட்டிற்கு வந்தவுடன் சொல்ல, அவர் தனது தாயாருடன் சுப்பிரமணியபுரம் C2. காவல் நிலையத்திற்கு சென்று தன்னுடைய நகையை ஏமாற்றி கொண்டு சென்றவர்களின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து , நகையை மீட்டுத் தரும்படி புகார் அளித்துள்ளார் புகாரைப் பெற்று கொண்டு, C2 காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் திருமதி S.பிரியா அவர்களின் உத்தரவின்படி சார்பு ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் இந்திய தண்டனைச் சட்டம் 420 ன்படி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி குற்றவாளியை தேடி வருகின்றனர்
போலீஸ் இ நியூஸ்
மதுரை மாவட்ட செய்தியாளர்கள்
M.அருள்ஜோதி
S.செளகத்அலி