மதுரையில் நடந்த குண்டு வெடிப்பு மற்றும் கொலை முயற்சி வழக்கில் தொடர்புடைய 7 பேரை சென்னையில் போலீசார் கைது செய்தனர். சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பாரடைஸ் தங்கும் விடுதியில், சந்தேகத்திற்கு இடமான வகையில் சிலர் தங்கியிருப்பதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து தங்கும் விடுதியில் சோதனை நடத்திய போலீசார் அங்கு அறை ஒன்றில் தங்கியிருந்த, முகமது ஆருண், தவுபிக் அலி, ரியாசுதீன் உள்ளிட்ட 7 பேரிடம் விசாரணை நடத்தினார். விசாரணையில் அவர்கள் மதுரையில் நடந்த குண்டு வெடிப்பு வழக்கு ஒன்றிலும், ஒரு கொலை முயற்சி வழக்கிலும் தொடர்புடையவர்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.