
மதுரையில் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றி வரும் மாணவர்களுக்கு திருக்குறள் புத்தகம் பரிசாக வழங்கிய போக்குவரத்துக் காவல் ஆய்வாளர்.
மதுரை மாநகர்.. ரயில்வே நிலையம் அருகில் அமைந்துள்ள சேதுபதி உயர்நிலை பள்ளியில் மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறையின் சார்பாக போக்குவரத்து மற்றும் போதை பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு வழங்கப்பட்டது.. இதில் மதுரை மாநகர போக்குவரத்து காவல் உதவி ஆணையர் இளமாறன்.. திலகர் திடல் போக்குவரத்து காவல் ஆய்வாளர் தங்கமணி.. மற்றும் பள்ளியின் தலைமை ஆசிரியர் நாராயணன்.. பள்ளி நிர்வாகிகள்..உதவி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் 300 மாணவர்கள் கலந்து கொண்டனர்.. இதில் குறிப்பாக பள்ளி மாணவர்கள் பேருந்தில் செல்லும் பொழுது செய்யக்கூடியவைகள் செய்யக்கூடாதவைகள் பற்றி விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.. பேருந்துகளில் படிக்கட்டுகளில் நின்று கொண்டோ தொங்கிக் கொண்டோ செல்வதனால் ஏற்படும் விபத்துக்கள் குறித்தும் விபரீதங்கள் குறித்தும் உணர்வுபூர்வமாக எடுத்துரைத்தனர்… இறுதியில் மாணவர்கள் அனைவரும் காவல் துறையினர் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் முன்பாக சாலை விதிகளை பின்பற்றுவோம், போதை பொருளை எதிர்ப்போம் என்று உறுதிமொழி மேற்கொண்டனர்.. போக்குவரத்து காவல் ஆய்வாளர் தங்கமணி அவர்கள் நிகழ்ச்சியின் நிறைவாக போக்குவரத்து விதிமுறைகளை தினசரி பின்பற்றி வரக்கூடிய மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் ஆய்வாளர் தங்கமணி அவர்கள் திருக்குறள் புத்தகத்தை பரிசாக வழங்கினார்.
