20 கி.மீ. தூரம் சைக்கிளில் சென்று ஆய்வு..!!அதிரடி காட்டும் திருச்சி சரக டி.ஐ.ஜி. ஆனி விஜயா ஐ.பி.எஸ்.
திருச்சி: திருச்சி சரக டி.ஐ.ஜி ஆனி விஜயா ஐ.பி.எஸ். 20 கி.மீ.தூரம் சைக்கிளில் சென்று சோதனைச்சாவடிகளில் ஆய்வு மேற்கொண்டார்.
தமிழகம் முழுவதும் இன்று முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் காவல்துறை கண்காணிப்பு பணிகளை ஆய்வு செய்வதற்காக காலையிலேயே சைக்கிளில் வலம் வந்தார் ஆனி விஜயா ஐ.பி.எஸ்.
ஆய்வின் போது பொதுமக்களிடம் கண்ணியமான முறையில் நடந்துகொள்ள வேண்டும் என காவலர்களுக்கு அவர் அறிவுரை வழங்கினார்.