மதுரை மாவட்டத்தில் கொரோனா விழிப்புணர்வு பணியில் காவல் துறையினர்
மதுரை மாவட்டத்தில் கொரோனா பரவல் பற்றிஅரசு அன்றாடம் அதிகாரபூர்வமாக அறிவிக்கும் தகவல்களைத் தாண்டி செவிவழி செய்தியாக வரும் மதுரை கோரோனா நிலவரம் தகவல்கள் அச்சம் கொள்ள வைக்கிறது.
இதேபோல் நோய்த் தொற்று அதிகரித்தால் சிக்கல்தான். மதுரை அரசு மருத்துவமனை கொரோனா வார்டுகள் நிரம்பிவிடும். மருத்துவக்குழுவினர் நெருக்கடிக்கு ஆளாவார்கள். சிகிச்சை, கவனிப்பு தற்போது போல் இருக்குமா? என்று சொல்ல முடியாது.
‘கொரோனா’ பரவிய ஆரம்பத்தில் இந்த தொற்று நோய் மதுரையை மிரட்டியது. தமிழகத்திலேயே இந்த நோய்க்கு மதுரையில்தான் முதல் உயிரிழப்பு நடந்தது. விரைவாக 2 பேர் இந்த நோய்க்கு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தனர்.
சென்னைக்கு இணையாக மதுரையில் தொற்று கண்டறியப்பட்டது. ஆனால், ஊரடங்கு கடுமையாக்கப்பட்டதும் மதுரையில் ‘கொரோனா’ பாதிப்பு அப்படியே குறையத்தொடங்கியது. அதேபோல், மாநகர மற்றும் புறநகர் போலீஸாரும் தூக்கமில்லாமல் சாலைகளில் வருவோர், செல்வோரை வழிமறித்து அறிவுரை வழங்கியும், எச்சரித்தும் அனுப்பினர்.
ஆனால், கடந்த 1-ம் தேதி ஊரடங்கு தளர்விற்குப் பிறகு மதுரையில் ‘கொரோனா’ தொற்று மீண்டும் வேகமெடுக்க ஆரம்பித்துள்ளது.
அதனால், ‘கொரோனா’ பரவல் அதிகரித்து தற்போது அதன் பாதிப்பு தெரிய ஆரம்பித்துள்ளது. இன்னும் 10 நாட்களுக்கு தொற்றின் வீரியம் தெரியும்.
சென்னையை போல் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்தால் மதுரை தாங்காது. இதேவேகத்தில் தொற்று அதிகரித்தால் 10 நாளிலேயே மதுரை ‘கொரோனா’ வார்டுகளில் நோயாளிகள் நிரம்பிவிடுவார்கள். புதிய நோயாளிகளை மருத்துவமனையில் சேர்க்க இடம் இல்லாமல் போய்விடும்.
மதுரை மாவட்டத்தில் தற்போது அதிகமான நோயாளிகள் சிகிச்சை முடிந்து ஆரோக்கியமாக குணமடைந்து வீடு திரும்பி வருகின்றனர். அதேநேரத்திலும் நோய் பரவலும் அதிகமாகியுள்ளது. நோயின் வீரியம் சற்று அதிகரித்தால் ‘கொரோனா’ வார்டுகளில் பணிபுரியும் மருத்துவக்குழுவினருக்கும் நெருக்கடி ஏற்படும். ஆக நிலைமை இவ்வாறு இருக்க, மக்களிடம் போதிய கொரோனா விழிப்புணர்வும் இல்லாமல், நடமாடுவது வழக்கமாக உள்ளது., எனவே முதலில் நோய் தொற்றை குறைத்து மக்களை காக்க வேண்டுமெனில், அவர்களுக்கு விழிப்புணர்வு அளிப்பது முக்கியம், இதனை கருத்தில் கொண்டு மதுரை மாவட்ட C.2.சுப்பிரமணியபும், காவல் நிலைய , சட்ட ஒழுங்கு ஆய்வாளர் திருமதி கலைவாணி அவர்கள் தலைமையில் மேற்படி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் முககவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் நடமாடும் மக்களுக்கு, தாய் உள்ளத்தோடு விழிப்புணர்வு ஏற்படுத்தி விலையில்லா முக கவசம் வழங்கியும் வருகின்றனர்.
மக்கள் கொரோனா தொற்றிலிருந்து, தங்களையும், தங்களை சார்ந்த உற்றார், உறவினர்களையும் பாதுகாக்க காவல் துறையினரின் அறிவுறுத்தல்களை பின்பற்றி நடந்து ஒத்துழைக்கும்படி போலீஸ் இ நியூஸ் சார்பாகவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
போலீஸ் இ நியூஸிற்காக
மதுரை மாவட்ட செய்தியாளர்கள்
M.அருள்ஜோதி
S.செளகத்அலி