
கறுப்பர் கூட்டம் யூ டியூப் சேனலில் சஷ்டி கவசம் குறித்து விமர்சித்த 500-க்கும் மேற்பட்ட வீடியோக்கள் நீக்கப்பட்டு, குகன் சோமசுந்தரம் இருவரையும் மத்திய குற்ற பிரிவு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
சர்ச்சைக்குரிய வீடியோக்களை யாரும் பார்க்க முடியதாபடி சைபர் கிரைம் போலீசார் நீக்கியது.
கறுப்பர் கூட்டம் என்ற யூ டியூப் சேனலில் கந்த சஷ்டி கவசம் குறித்து விமர்சித்து அவதூறு வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தனர். இது குறித்து சென்னை மத்தியகுற்றப்பிரிவில் புகார் அளித்ததன் பேரில் போலீசார் விசாரணை செய்து மேலும் மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட ஓட்டேரியைச் சேர்ந்த சோமசுந்தரம், மறைமலை நகரைச்சேர்ந்த குகன் ஆகிய இருவரை கைது செய்து மத்தியகுற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.
போலீஸ் இ நியூஸ் மாவட்ட நிருபர் ச.அரவிந்தசாமி சிவகங்கை