
மதுரையில் ரூ 5 லட்சம் கடனுக்காக வக்கீலை கடத்திய சகோதரர்
மதுரையில் ரூபாய் 5 லட்சம் கடனுக்காக பட்டப்பகலில் வக்கீல் செந்தில் வேல் வயது 32 என்பவரை காரில் கடத்திய அவரது சகோதரர் ராஜ்குமார் உள்பட மூவரை போலீசார் கைது செய்தனர்.
கடத்தல்காரர்கள் தாக்கியதில் காயமுற்ற செந்தில்வேல் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்
மதுரை காந்தி மியூசியம் ரோட்டில் நேற்று முன்தினம் மதியம் காரில் பயணித்த நபர் அவசரமாக கதவைத் திறந்து தப்பிக்க முயன்றார் அவரை காரில் இருந்தவர்கள் சத்தம் போட்டு உள்ளே இழுத்தனர் காரை பின்தொடர்ந்து டூவீலரில் வந்த இருவர் உடனடியாக இறங்கி அந்த நபரை காருக்குள் வலுக்கட்டாயமாக தள்ளி கடத்திச் சென்றனர்
இதை அவ்வழியே வந்த ஆயுதப் படை போலீஸ்காரர் விக்னேஷ் என்பவர் அலைபேசியில் வீடியோ எடுத்து பின் தொடர்ந்தார்
மாவட்ட நீதிமன்றம் வழியாக கார் வேகமாக சென்றதால் அவரால் பின் தொடர முடியவில்லை
உடனடியாக தல்லாகுளம் காவல் நிலையத்திற்கு சென்று நடந்த விபரத்தை தெரிவித்தார் அதனை தொடர்ந்து போலீசார் அலர்ட் ஆயினர் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது காரின் பதிவெண் இல்லாமல் இருந்தது தெரிந்தது. அதே நேரம் டூவீலரின் பதிவு எண்கள் கிடைத்தன அதன்படி விசாரணையை துவங்கினர் அந்த பதிவெண் கொண்ட டூவீலர் தல்லாகுளம் கௌதம் என்பவருடையது என தெரிய வந்தது. தொடர் விசாரணையில் கடத்தல்காரர்கள் சிவகங்கை மாவட்டம் திருப்பாசேத்தி பகுதியில் கடத்தப்பட்ட நபருடன் பதுங்கி இருந்தது தெரிய வந்தது அவர்களை தனிப்படை போலீசார் வளைத்தனர் விசாரணையில் கடத்தப்பட்ட நபர் ராமநாதபுரம் மாவட்டம் கமுதையைச் சேர்ந்த வக்கீல் செந்தில்வேல் என தெரிந்தது ஓரிருஆண்டுகளுக்கு முன் பெரியப்பா மகனான பார்த்திபனூரை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் ராஜ்குமாரிடம் வயது 5 லட்சம் ரூபாய் கடன் பெற்றுள்ளார் அதை திரும்பத் தராமல் இழுத்தடிப்பதால் நேற்று முன்தினம் தொழில் நிமித்தமாக காரில் மதுரை வந்த செந்தில் வேலை ராஜ்குமார் மற்றும் அவரது கூட்டாளிகளும் பின் தொடர்ந்தனர். மதியம் ஓட்டலில் பிரியாணி சாப்பிட்டுவிட்டு செந்தில் வேல் புறப்பட்டார் காரை டிரைவர் லட்சுமணன் வயது 30 ஓட்டினார் தமுக்கம் அருகே வரும் போது காரை வழிமறித்து ராஜ்குமார் உள்ளிட்டோர் காரில் ஏறி கடத்தினர்.
காந்தி மியூசியம் ரோட்டில் செந்தில் வேல் தப்பிக்க முயன்றது போது கடத்தல் விவகாரம் மற்றவர்களுக்கு தெரிய வந்தது
ராஜ்குமார் தாக்கியதில் செந்தில் வேலுக்கு வெட்டு காயம் ஏற்பட்டது தற்பொழுது அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் கடத்தல் வழக்கில் ராஜ்குமார் கௌதம் மதுரை மாரிமுத்து ஸ்ரீகாந்த் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
