பம்பரமாய் சுழலும் தமிழ் நாடு போக்குவரத்து காவல்துறை உதவி ஆணையர் மதிப்பிற்குரிய ஐயா திரு இரா.ஹிட்லர் அவர்கள் அடையார் சரகம் .
கொரோனாவை எதிர்த்து போராடும் பொதுமக்களுக்கு பாதுகாப்பாக செயல்படும் ஒவ்வொரு காவலர்களுக்கும் அதுவும் தன்னுடைய அடையார் சரகத்தில் சேர்ந்துள்ள ஒவ்வொருவருக்கும் உற்சாக கனிவான பேச்சுடன் போக்குவரத்து காவல்துறை உதவி ஆணையர் திரு ஹிட்லர் அவர்கள் காவல்துறை பணி என்பது மக்கள் பணி காவல்துறை தங்களுடைய இயல்பான சமூக பணிகளை செய்ய வேண்டும் என்று காவல்துறையினரை ஊக்குவித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். ஒரு சிலர் செய்கின்ற தவறுகளை வைத்து எல்லா காவல்துறையினரை தவறு என்று சொல்ல முடியாது. காவல்துறையினரை தொடர்ந்து ஊக்குவித்து வருகிறோம்.அதுமட்டுமின்றி மடிப்பாக்கம் காவலருக்கு கொரோனா தொற்று ஏற்ப்பட்டு ஓமந்தூரர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டது முதல் அவரை தினம் தோறும் விசாரித்தும் அவருடைய குடும்பத்துக்கு ஆறுதல் கூறியும் அவர் பணிக்கு திரும்பும்வரை பல நன்மைகளை செய்து இருக்கிறார்.மன அழுத்தத்தில் இருக்கும் காவலருக்கு பயிற்சி உடல்சோர்வாகதபடி ஊட்டசத்து பொருட்கள் நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள் போன்றவைகளை அனைத்து காவலர்களுக்கும் வழங்கி வருகிறார். இரவுபகல் பாராமல் அயராமல் பொதுமக்களுக்கு சேவையாக கருதாமல் குடும்பத்தை மறந்தும் தியாகமாக செய்வதுமட்டுமன்றி நேர்மையாகவும் மிகவும் சிறப்பாகவும் செயல்பட்டு வருகிறார்.
போலீஸ் இ நியூஸ் செய்திகளுக்காக. T.பிரபு தென்சென்னை மாவட்ட செய்தியாளர்