பொது மக்கள் சேவையில் J12 கானத்தூர் E.C.R சாலை உதவி ஆய்வாளர் திரு.அறிவழகன் அவர்கள்.
தமிழ்நாடு காவல்துறை மதிப்பிற்குரிய D.G.P திரிபாதி I.P.S மற்றும் மரியாதைகுரிய மகேஷ்குமார் அகர்வால் I.P.S. அவர்கள் உத்தரவுபடி ஆங்காங்கே கொரோனா விழிப்புணர்வு நடைப்பெற்று கொண்டிருக்கிறது. அதிவேகமான சாலையான E.C.R J12காவல்துறை உதவி ஆய்வாளர் சட்டம் ஒழுங்கு தினமும் காலையில் வாகன சோதனயின்போது வாகன ஓட்டிகளிடம் மிகவும் மரியாதையாக முதலில் முககவசம் இருக்கிறதா என்றும் உரிய ஆவணங்கள் இருக்கிறதா என்றும் சரிபார்க்கபட்டு பின் அனுமதிக்கின்றனர்.தேவை இல்லாமல் உரிய ஆவணங்கள் இல்லாமல் வரும் வாகன ஓட்டிகளிடம் சட்டபடி அபராதம் விதிக்கின்றனர்.வாகன ஓட்டிகளான பெண்களிடமும் கனிவான பேச்சுடன் கன்னியமான முறையில் விசாரித்து அனுமதிக்கின்றனர் . இதுமட்டுமல்லாமல் திரு.அறிவழகன் அவர்கள் நடந்து செல்லும் பாதசாரிகள் முதியவர்கள் வாலிபர்கள் ஆகிய அனைவருக்கும் கொரோனா பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார்.சாலை ஓரங்களில் பசியோடு தவிக்கும் நபர்களுக்கு தன்னுடைய ஊதியத்தில் இருந்து உணவு வழங்குகிறார்.தன்னுடைய குடும்பத்தை மறந்து கடும் வெயிலிலும் மழையிலும் காலில் வலியோடு சரியான நேரத்தில் சாப்பிட முடியாமல் டீகடை கூட இல்லாத இடத்தில் பொதும்களுக்கு எந்தவித பாதிப்பும் வராமல் உயரை பொருட்படுத்தாமல் சேவையாக கருதாமல் தியாகமாக காவல்பணியை செய்து வருகிறார் .பொதுமக்கள் மட்டுமின்றி இதுபோன்று சக காவலர்களுக்கும் எப்படி நடந்து கொள்வது பற்றி அறிவுறையும் ஊட்டச்சத்து போன்ற பொருட்களை சாப்பிடும் படி அக்கறையும் செலுத்துகிறார்.ஏழை எளிய மக்களுக்கு தன்னால் இயன்ற அளவுக்கு உதவி செய்கிறார்.இப்படி பல நன்மைகளை பொதுமக்களுக்கு நேர்மையாகவும் மரியாதையாகவும் கன்னியமான முறையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.J12 கானத்தூர் காவல்துறை உதவி ஆய்வாளர் திரு.அறிவழகன் அவர்கள்.சரியான முறையில் கண்கானிக்கிறார் என்று அப்பகுதிவாழ் மக்கள் கூறுகின்றனர்.
போலீஸ் இ நியூஸ் செய்திகளுக்காக. T.பிரபு தென்சென்னை மாவட்ட செய்தியாளர்