மதுரை ஐராவதநல்லூர் பகுதியில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட 5 வாலிபர்கள் கைது
மதுரை தெப்பக்குளம், B3, காவல் நிலைய ஆய்வாளர் திரு. கனேஷன் அவர்களின் உத்தரவின்படி சார்பு ஆய்வாளர் திரு. சிவராமகிருஷ்ணன், தலைமை காவலர் வரதராஜன், மற்றும் காவலர்கள் செந்தில், பாலகிருஷ்ணன் ஆகியோர், குற்றத் தடுப்பு சம்பந்தமாக கடந்த 8ம் தேதியன்று காலை சுமார் 8 மணியளவில் ஐராவதநல்லூர், காதியானூர் கண்மாய் செம்மண் ரோடு பகுதியில் ரோந்து சென்ற போது, சில நபர்கள் பயங்கரமான ஆயுதங்கள் வாள், இரும்பு பட்டா, கயிறு, மற்றும் மிளகாய் பொடி ஆகியவற்றோடு கொள்ளை சம்பவம் நடத்த திட்டம் தீட்டிக் கொண்டிருந்தனர், அவர்கள் காவலர்களை பார்த்ததும் ஓட்டம் பிடித்தனர், ஓடிய வாலிபர்களை பிடித்து விசாரித்த போது, அவர்கள்,
1)அனுப்பானடி பகுதியை சேர்ந்த முத்துப்பாண்டி மகன் முத்துகுமார், வயது 19,/2020,
2)மருதுபாண்டி மகன் அருண்பாண்டி வயது 19/2020,
3) மீனாட்சி நகர் பகுதியை சேர்ந்த மாணிக்கம் மகன் சுடலைமணி வயது 20/2020,
4) மேல அனுப்பானடியை சேர்ந்த மருதுபாண்டி மகன் மணிரத்தினம் வயது 20/2020,
5) பால்பாண்டி மகன் சங்கர் வயது 25/2020, என தெரியவந்தது. மேலும் அவர்கள் கொடுத்த வாக்கு மூலத்தின்படி அவர்கள் கொள்ளை சம்பவம் நடத்த திட்டம் தீட்டியிருந்தது தெரிய வந்தது. உடனே அவர்களிடமிருந்த ஆயுதங்களை பறிமுதல் செய்து அவர்களின் மீது இந்திய தண்டனைச் சட்டம் 399 வது பிரிவின்படி வழக்கு பதிவு செய்து மேற்படி 5 நபர்களையும் கைது செய்தனர்.
இதன் மூலம் அந்த பகுதியில் நடக்கவிருந்த மாபெரும் கொள்ளைச் சம்பவம் தடுக்கப்பட்டது.
போலீஸ் இ நியூஸிற்காக
மதுரை மாவட்ட செய்தியாளர்கள்
M.அருள்ஜோதி
S.செளகத்அலி