திருநெல்வேலி: வள்ளியூரில் திருட்டு மற்றும் குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில், வள்ளியூர் வியாபாரிகள் சங்கம் சார்பில், ரூ.8 லட்சம் செலவில் 27 கண்காணிப்பு கேமராக்கள் புதிதாக அமைக்கப்பட்டு உள்ளன.
வள்ளியூர் பழைய பஸ்நிலையம் முதல் ராதாபுரம் மெயின்ரோடு வழியாக முருகன் கோவில் வரை ஆங்காங்கே இந்த கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
இதன் தொடக்க விழா வள்ளியூர் காவல் நிலையத்தில் நடந்தது. வியாபாரிகள் சங்க தலைவர் சின்னத்துரை தலைமை தாங்கினார். செயலாளர் ராஜகுமார், பொருளாளர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வள்ளியூர் துணை காவல் கண்காணிப்பாளர் கனகராஜ் வரவேற்றார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண்சக்திகுமார் புதிய கண்காணிப்பு கேமராக்களை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் வியாபாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஆய்வாளர் சுரேஷ்குமார் நன்றி கூறினார்