
தென்காசி மாவட்ட புளியரை காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் வாகன சோதனையில் கஞ்சா பிடிபட்டது
தென்காசி காவல் கண்காணிப்பாளர் திரு அரவிந் அவர்களின் உத்தரவுபடி துணை காவல் கண்காணிப்பாளர் திரு தமிழ் இரணியன் அவர்களின் மேற்பார்வையில் புளியரை காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் போலிசார் கடுமையான வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் அங்கு நடந்த வாகன சோதனையின் போது இரண்டு கிலோ கஞ்சா சிக்கியது.
புளியரை காவல் நிலைய சரகத்தில் காரில் கஞ்சா கடத்துவதாக கிடைத்த ரகசிய தகவலின் படி புளியரை காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் போலீசார் புளியரை தாட்கோ நகரில் வாகன சோதனை செய்த போது போலீசாரை பார்த்து திரும்பி செல்ல முயன்ற காரை நிறுத்தி சோதனை செய்தனர் அப்போது அந்த காரின் சீட்டிற்கு கீழ் சுமார் இரண்டு கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது உடனே கஞ்சாவை கைபற்றி கார் மற்றும் காரில் வந்தவர்களை ஆய்வாளர் திரு.பாலமுருகன் விசாரனை செய்தபோது அவர்கள் திருநெல்வேலி ரெட்டியார்பட்டியை சேர்ந்த தினேஷ் மற்றும் புளியரை பகவதிபுரத்தை சேர்ந்த ரவிராஜ வர்மன் என தெரிய வந்தது உடனே அவர்களை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் தினேஷ் மீது ஏற்கனவே கஞ்சா வழக்கு இருப்பது குறிப்பிடதக்கது.
