மதுரை ஆரப்பாளையம் பகுதியில் மது போதையில் இளைஞர் கொடூரமாக வெட்டிக் கொலை
மதுரை மாநகர், கரிமேடு, C5, காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியான ஆரப்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் பார்த்திபன், இவருக்கு வயது 29, இவர் கொரோனா, தடுப்புப்பணியில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறார்.
சம்பவத்தன்று, இவர் ஆரப்பாளையம், பிள்ளைமார் தெருவிலுள்ள பொது கழிப்பறை முன்பாக தன் சக நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தார் அப்போது பேச்சு வார்த்தையில் இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டதில் பார்த்திபனை சக நண்பர்கள் கொடூரமாக வெட்டி கொலை செய்தனர், கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டனர். அதன் பின் தகவல் அறிந்த கரிமேடு காவல் நிலைய காவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்திபன் உடலை பிரேத பரிசோதனைக்கு அரசு ராஜாஜி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பின் பார்த்திபன் சகோதரன் முத்துகுமார் கரிமேடு C5, காவல் நிலையத்தில், கொலையாளிகளை கண்டு பிடித்து அவர்களுக்கு தக்க தண்டனை பெற்றுத் தரும்படி புகார் அளித்தார்.
புகாரினை பெற்றுக் கொண்டு காவல் ஆய்வாளர் திரு. பாலமுருகன் அவர்களின் உத்தரவின்படி சார்பு ஆய்வாளர் சுந்தரபாண்டியன் அவர்கள் வழக்கு பதிவு செய்து, கொலையாளிகளை கண்டு பிடித்து கைது செய்தனர் கொலையில் தொடர்புடைய அவரது சக நண்பர்களான ஆரப்பாளையத்தை சேர்ந்த கோபாலகிருஷ்ணன், சங்கரமணிகண்டன், பாலாஜி, மற்றும் 17 வயதுடைய இரண்டு சிறுவர்கள் ஆக ஐந்து பேரை கைது செய்து விசாரணை நடத்தி நீதி மன்ற உத்தரவின்படி சிறையில் அடைத்தனர்.
போலீஸ் இ நியூஸிற்காக
மதுரை மாவட்ட செய்தியாளர்கள
M.அருள்ஜோதி
S.செளகத்அலி