புத்தாண்டு நாளுக்கு முந்தைய இரவு குடித்துவிட்டு வாகனம் ஓட்டிய 125 பேருக்கு பாஸ்போர்ட் பெறுவதற்கான தடையில்லா சான்றிதழ் வழங்கப்படாது என சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஏற்கெனவே போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை விடுத்திருந்தபடி, குடித்துவிட்டு வாகனம் ஓட்டிய 103 இருசக்கர வாகன ஓட்டிகள், 13 கார் ஓட்டுநர்கள் உள்ளிட்ட 125 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவருக்கும் பாஸ்போர்ட் பெறுவதற்கான தடையில்லா சான்று வழங்கப்பட மாட்டாது என
2016 ஆம் ஆண்டில் சென்னையில் மட்டும் ஆயிரத்து 1,220 பேரும், 2017 ஆம் ஆண்டில் 1,312 பேரும் விபத்தில் பலியானதாகக் கூறியுள்ள அவர், விபத்தில் பலி அதிகரித்திருப்பதால், இந்த ஆண்டில் விபத்துகளை குறைத்து, பலி எண்ணிக்கையை குறைக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.