வேலூர்: வேலூர் மாவட்டத்தில் 2017 ஆண்டில் மட்டும் 718 ரவுடிகள் கைது செய்யப்பட்டு உள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.இ பகலவன் தெரிவித்து உள்ளார்
வேலூர் மாவட்டத்தில் கொலை, கொள்ளை, மற்றும் வழிப்பறி உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் 774 ரவுடிகளின் தகவல்கள் சேகரிக்கப்பட்டு, 718 ரவுடிகள் கைது செய்யப்பட்டு, வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர். தலைமறைவான 56 ரவுடிகளை பிடிக்க நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.மாவட்டத்தில் வழிப்பறியில் ஈடுபட்ட 368 பேரில் கடந்தாண்டு 334 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 34 பேர் சந்தேகத்தில் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். செம்மர கடத்தல் ஏஜன்டுகள் 12 பேரின் நடவடிக்கைகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறதுமாவட்டத்தில் வழிப்பறியில் ஈடுபட்ட 368 பேரில் கடந்தாண்டு 334 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 34 பேர் சந்தேகத்தில் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். செம்மர கடத்தல் ஏஜன்டுகள் 12 பேரின் நடவடிக்கைகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.இந்தாண்டு வேலூரில் குற்றங்களை தடுக்க தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.இ பகலவன் தெரிவித்தார்.
வேலூர் மாவட்டத்தில் ஆண்டு மட்டும் நடந்த 598 சாலை விபத்தில் 637 பேர் உயிர் இறந்துள்ளனர்.
உலக அளவில் விபத்து அதிகம் நடக்கும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. மாநில அளவில் தமிழகம் முதலிடத்திலும், மாவட்ட அளவில் வேலூர் மாவட்டம் முதலிடத்தில் உள்ளது.
..
கடந்த 2016ல் வேலூர் மாவட்டத்தில் 662 விபத்து நடந்தன. இதில் 732 பேர் இறந்தனர். 2,745 பேர் படுகாயம் அடைந்தனர். 2017 ல் நடந்த 598 சாலை விபத்துகளில் 637 பேர் உயிர் இறந்துள்ளனர். 2,019 பேர் படுகாயம் அடைந்தனர்.
இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.இ.பகலவன் தெரிவித்ததாவது: வேலூர் மாவட்டத்தில் வாகன விபத்தை குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நான்கு வழி சந்திப்பு குறுகலான வளைவுகளில் பேரி கார்டுகள் ரிப்ளக்டர்கள் வைக்கப்பட்டுள்ளன. இதனால் 2016ஐ காட்டிலும் கடந்தாண்டு 27 சதவீதம் சாலை விபத்து எண்ணிக்கை குறைந்துள்ளன. கடந்தாண்டு விதிமுறை மீறி வாகனம் ஓட்டிய 7,268 பேரின் டிரைவிங் லைசன்ஸ் ரத்து செய்யப்பட்டுள்ளன என்று அவர் கூறினார்.