Police Department News

அரசு அனுமதியின்றி சட்ட விரோதமாக மணல் கடத்தலில் ஈடுபட்ட இரு நபர்கள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது

அரசு அனுமதியின்றி சட்ட விரோதமாக மணல் கடத்தலில் ஈடுபட்ட இரு நபர்கள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி காவல் நிலைய குற்ற எண். 354/2020, இந்தியச் சட்டத்துடன் இணைந்த 21(1)(iv) கனிமங்கள் மற்றும் சுரங்கங்கள் ( முறைப்படுத்துதல் மற்றும் மேம்படுத்துதல்) சட்டம் 1957. வழக்கில் எதிரிகளான தூத்துக்குடி மாவட்டம் திரவியம் ரத்தினம் நகர் பகுதியைச் சேர்ந்த வேல்முருகன், என்பவரின் மகன் நாகராஜ் வயது 52, நாகராஜன் மகன் முத்துக்குமார், வயது 30, ஆகியோர் சட்ட விரோதமாக அரசு அனுமதியின்றி மணல் கடத்தலில் ஈடுபட்டு வருவதாக, திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணன் IPS அவர்களின் கவனத்திற்கு வந்ததால், மேற்படி எதிரிகளை பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க நாங்குநேரி காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) திரு. அசோகன் அவர்களுக்கு அறிவுறுத்தியதின் பேரில் மேற்படி நபர்களை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அவர்களின் பரிந்துரையின்படி மாவட்ட ஆட்சி தலைவர் அவர்களின் உத்தரவின்படி எதிரிகளான நாகராஜன், முத்துக்குமார் ஆகியோரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

போலீஸ் இ நியூஸிற்காக
மதுரை மாவட்ட செய்தியாளர்கள்
M.அருள்ஜோதி
S.செளகத்அலி

Leave a Reply

Your email address will not be published.