ஆளுநரின் பாதுகாப்பு அதிகாரி உட்பட ஐபிஎஸ் அதிகாரிகள் 3 பேரை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழக காவல்துறையில் எஸ்பி அந்தஸ்து ஐபிஎஸ் அதிகாரிகள் மூன்று பேரை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவை தமிழக உள்துறைச் செயலர் நிரஞ்சன் மார்டி பிறப்பித்துள்ளார்.
மாற்றப்பட்ட அதிகாரிகள் விபரம்
1.கன்னியாகுமரி காவல் கண்காணிப்பாளரான துரை ஆளுநரின் பாதுகாப்பு அதிகாரியாக மாற்றப்பட்டுள்ளார்.
2. ஆளுநரின் பாதுகாப்பு அதிகாரி பொறுப்பில் இருந்து ப்ரவீன் குமார் சிபிசிஐடி எஸ்பியாக சென்னையில் பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார்
3. சென்னை சிபிசிஐடி எஸ்பி ஸ்ரீநாதா கன்னியாகுமரி எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார்.
இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.