தூத்துக்குடி மாவட்டம் :-
கோவில்பட்டி மேற்கு காவல் நிலையம்.
கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர் கைது.
கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. ஆர்தர் ஜஸ்டின் சாமுவேல்ராஜ் தலைமையிலான போலீசார் இன்று(10.09.2020) ரோந்து பணியில் ஈடுபட்ட போது கோவில்பட்டி புதிய பேருந்து நிலையம் பின்புறம், கோவில்பட்டி, காந்தி நகரைச் சேர்ந்த பொன்பாண்டி மகன் விமல் குமார் என்ற வெயிலுகுட்டி(28), கோவில்பட்டி வீரவாஞ்சிநகரைச் சேர்ந்த வெயிலுமுத்து மகன் மாரிச்செல்வம், சண்முகம் மகன் மாரிமுத்து, தமிழரசன் மற்றும் தமிழ்ச்செல்வன் ஆகியோர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் திரு. அய்யப்பன் வழக்குப்பதிவு செய்து விமல்குமார் என்ற வெயிலுகுட்டியை கைது செய்தார்.
மேலும் அவரிடம் இருந்த 1.100 கிலோகிராம் கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது.
