கொரோனா களப்பணியில் மரணமடைந்த , மதுரை சுப்பிரமணியபுரம் காவல் சிறப்பு சார்பு ஆய்வாளர் சந்தானபாண்டியன்
மதுரை சுப்பிரமணியபுரம் C2, காவல் நிலையத்தில் சிறப்பு சார்பு ஆய்வாளராக பணி புரிந்து வந்த சந்தானபாண்டியன், கொரோனா வைரஸ் நோய் தொற்றின் காரணமாக மதுரை தனியார் மருத்துவ மனையில் கடந்த எட்டு நாட்களாக சிகிச்சை பெற்று வந்த சூழலில் சிகிச்சை பலனின்றி 09/09/2020 அன்று மரணம் அடைந்தார்.
கொரோனா களப்பணியில் முன் களப்பணியாளராக நின்று பொறுப்புணர்வுடன் பணியாற்றி வந்த அவரின் மறைவிற்கு சுப்பிரமணியபுரம் C2, காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. கலைவாணி அவர்கள் மற்றும் சக காவலர்கள் அனைவரும் கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள்
