ஸ்ரீவைகுண்டம் அருகே கோவில் பூட்டை உடைத்து நகை, உண்டியல் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே சுப்பிரமணியபுரத்தில் இசக்கியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று முன்தினம் இரவு பூஜைக்குப் பிறகு நடை சாத்தப்பட்டது. நேற்று காலையில் கோவில் தர்மகர்த்தா தர்மகர்த்தா முருகன்(வயது 60) என்பவர் நடையை திறக்க வந்துள்ளனர். அப்போது கோவில் கதவில் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது.
மேலும், அம்மன் கழுத்தில் கிடந்த 7 கிராம் தங்க நகை, உள்ளிட்ட ஆபரணங்கள், மற்றும் உண்டியல் பணம் ஆகியவை மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டிருந்து.
இதுகுறித்து கோவில் தர்மகர்த்தா முருகன் சேரகுளம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சப் இன்ஸ்பெக்டர் மகேஸ் வழக்கு பதிவு செய்துள்ளார். கொள்ளையில் ஈடுபட்ட மர்ம மனிதர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
