தமிழக-கர்நாடக எல்லையில் எஸ்பி திடீர் ஆய்வு
ஈரோடு மாவட்டத்தில் கடந்த வாரம் பொறுப்பேற்றுக்கொண்ட எஸ்.பி.திரு சசிமோகன் அவர்கள் நேற்று தமிழக கர்நாடக எல்லையில் உள்ள தாளவாடி மலைப் பகுதிக்குச் சென்று தாளவாடி மற்றும் ஆசனூர் காவல் நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டார் இதனை தொடர்ந்து மாநில எல்லைப் பகுதியில் உள்ள காரபபள்ளம் ராமபுரம் எல்லக்கட்டை கும்டாபுரம் கேர்மாளம் ஆகிய சோதனைச் சாவடிகளில் ஆய்வு மேற்கொண்டு எஸ்பி கொரானா ஊரடங்கு காலத்தில் கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகத்துக்கு வரும் வாகனங்கள் குறித்து போலீசார் அவரிடம் கேட்டறிந்தார் மேலும் கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு மதுபானங்களை கடத்துவது கண்டறிந்து நடவடிக்கை எடுக்குமாறு போலீசார் அறிவுறுத்தினர்…