கொலைவழக்கில் ஈடுபட்ட ஐந்து நபர்கள் 24 மணி நேரத்தில் கைது
மதுரை, சிறுதூர், ஜவஹர்லால்புரம் மெயின் ரோட்டில் முன்விரோதம் காரணமாக முருகன் என்பவர் கொலை செய்யப்பட்டதாக முருகனின் மனைவி முத்துசெல்வி என்பவர் கொடுத்த புகாரை பெற்று
தல்லாகுளம்
காவல் நிலையத்தில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு, கொலை குற்றத்தில் ஈடுபட்ட நபர்களை உடனடியாக கைது செய்யும்படி மதுரை மாநகர சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் துணை ஆணையர் சிவபிரசாத் . உத்தரவிட்டார்கள். உத்தரவுப்படி தல்லாகுளம் காவல் .ஆய்வாளர் மலைச்சாமி செல்லூர் காவல் ஆய்வாளர் கோட்டைச்சாமி செல்லூர் காவல் உதவி ஆய்வாளர் தியாகப் பிரியன். தல்லாகுளம் காவல் உதவி ஆய்வாளர் சண்முகநாதன் தலைமை காவலர்கள் முத்துக்குமார். செல்வராஜ் ஆகியோர்கள் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு கொலை செய்த நபர்களை தேடிவந்ததில் மதுரையைச் சேர்ந்த
கிருஷ்ணன் 47,
தீபக் என்ற பாண்டியராஜன் வயது 24.,
அஜித்குமார் 20.,
அமீர்கான் வயது 24,
பாண்டி வயது 24., ஆகிய ஐந்து நபர்களையும் தனிப்படையினர் கைது செய்தனர். குற்றவாளிகளை 24 மணி நேரத்தில் கைது செய்த தனிப்படையினரை மதுரை மாநகர காவல் ஆணையர் . பிரேம் ஆனந்த் சின்ஹா பாராட்டினார்.