சென்னையில் இரவு நேரப் பணியில் இருக்கும் காவல்துறை அதிகாரிகளின் பெயர் மற்றும் தொடர்பு எண்களை சமூக வலைதலங்களில் வெளியிடும் திட்டம் தொடக்கம் ..!
சென்னை பெருநகர காவல்துறையில் இரவுப் பணியில் இருக்கும் அதிகாரிகளின் பெயர் மற்றும் தொடர்பு எண்களை சமூக வலைதலங்களில் வெளியிடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை பணியில் இருக்கும் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்டோரின் பெயர்கள், தொடர்பு எண்கள் ஃபேஸ்புக் மற்றும் டிவிட்டர் பக்கங்களில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் பொதுமக்கள் எளிதில் காவல்துறையினரை தொடர்பு கொள்ளலாம் என்றும் இரவு நேர குற்றச் செயல்கள் குறையும் வாய்ப்புள்ளதாகவும் போலீசார் தெரிவிக்கின்றனர்.
