கண்ணகி நகர் மாணவர்களுக்கு நன்மையான செயல்களை செய்யும் கண்ணகி நகர் காவல் துறை ஆய்வாளர் ஐயா திரு.வீரக்குமார் அவர்கள்
அடையார் காவல் மாவட்டம்
துணை ஆணையர் திரு.விக்ரமன் அவர்கள் தொடங்கி வைத்தார்.
துறைப்பாக்கம் காவல் சரகம் உதவி ஆணையர் திரு. லோகநாதன் அவர்கள் மற்றும் கண்ணகி நகர் J11 ஆய்வாளர் திரு.வீரக்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அனைவருக்கும் வணக்கம்,
முன்தினம் (17.09.2020) காலை 9 மணியளவில் நமது கண்ணகி நகர்,எழில்நகரிலுள்ள மாணவர்களின் நலன்கருதி அவர்களின் (திறன்மேம்பாட்டு பயிற்சிகள்) ITI (டிப்ளமோ) படிப்பிற்கான மாணவர்கள் சேர்க்கை முகாம் நமது J11 காவல் நிலையத்தின் ஆய்வாளர் திரு. வீரக்குமார் அவர்களின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களும், 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற தவறிய மாணவர்களும் இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்தி தங்களது படிப்பை தொடருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
தேவையான ஆவணங்கள்:
பள்ளி சான்றிதழ்
சாதி சான்றிதழ்
ஆதார் அட்டை
புகைப்படம்
கட்டணம் ரூபாய் 250 மட்டும்
இடம் : J11 காவல் நிலையம்
இச்செய்தியை நமது பகுதி யிலுள்ள அனைத்து மாணவர்களுக்கும்,அவர்களின் பெற்றோர்களுக்கும் தெரியப்படுத்தி அவர்களின் கல்விக்கு உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்