காவலர் தேர்வு எழுதுபவர்களுக்கான மகிழ்ச்சியான செய்தி
தமிழ்நாடு காவலர் தேர்வில் ஆண் போட்டியாளர்கள் மிக கடினமாக கருதுவது கயிறு ஏறுதல் ஆகும்.
இந்தக் கயிறு ஏறுதலுக்கு சென்ற ஆண்டு வரை ஒரு வாய்ப்பு (ஒரு முறை) மட்டுமே வழங்கப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் இந்த 2020 ஆம் ஆண்டின் காவலர் தேர்வுக்கான அறிவிப்பில் கயிறு ஏறுதல், நீளம் தாண்டுதல்/உயரம் தாண்டுதல் ஆகியவைகளுக்கு மூன்று வாய்ப்புகள் வழங்கப்படவுள்ளதாக தகவல் சிற்றேட்டின் பத்தாம் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது கயிறு ஏறுதல் கடினமாக நினைக்கும் மாணவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பாகும்.
மேலும் அதேபோல் பெண்களுக்கான உடல்திறன் போட்டிக்கான நீளம் தாண்டுதல், குண்டெறிதல்/கிரிக்கெட் பந்து எறிதல் ஆகியவைகளுக்கு மூன்று வாய்ப்புகள் வழங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளன.
இதற்கு முன்னர் இரு வாய்ப்புகள் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
