Police Department News

சட்டவிரோதமான செயல்களில் ஈடுபட்டு பொது மக்களை அச்சுறுத்தி வந்த நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது.

சட்டவிரோதமான செயல்களில் ஈடுபட்டு பொது மக்களை அச்சுறுத்தி வந்த நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது.

திருநெல்வேலி மாவட்டம் (18.09.2020)

திசையன்விளை காவல் நிலைய குற்ற எண்: 274/20 பிரிவு 341,294(b),387,506(ii)IPC வழக்கில் எதிரியான திசையன்விளை உறுமன்குளம் சிவன் கோவில் தெருவை சேர்ந்த சுடலைகண் என்பவரின் மகன் மணிகண்டன் (27) என்பவர் சட்டவிரோதமான செயல்களில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ. மணிவண்ணன் இ.கா.ப அவர்களின் கவனத்திற்கு வந்ததால், மேற்படி எதிரியை பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க திசையன்விளை காவல் நிலைய ஆய்வாளர் திரு.சு. ஷ்யாம் சுந்தர் அவர்களுக்கு அறிவுறுத்தியதன் பேரில், மேற்படி நபரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் பரிந்துரையின் படி, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உத்தரவின் பேரில், எதிரி மணிகண்டன் என்பவரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்த தடுப்புக் காவல் உத்தரவு ஆணையை 18.09.2020 ஆய்வாளர் திரு.சு.ஷ்யாம் சுந்தர் அவர்கள் நாங்குநேரி பார்ஸ்டல் பள்ளியில் சமர்பித்தார்.

Leave a Reply

Your email address will not be published.