Police Department News

சென்னை எண்ணூரில், ரவுடி கொலை கஞ்சா கேட்டு மிரட்டியதால் கொன்றோம் கைதான 7 பேர் வாக்குமூலம்;

சென்னை எண்ணூரில், ரவுடி கொலை கஞ்சா கேட்டு மிரட்டியதால் கொன்றோம் கைதான 7 பேர் வாக்குமூலம்;

சென்னை,எண்ணூர் பகுதியில், ரவுடி கொல்லப்பட்ட வழக்கில், 7 பேரை போலீசார் கைது செய்தனர், கஞ்சா கேட்டு மிரட்டியதால், ரவுடியை கொன்றதாக , வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.

சென்னை, எண்ணூர், தாழங்குப்பம், 22 வது பிளாக்கை சேர்ந்தவர் ராஜசேகர்(29), இவரின் மனைவி சந்தியா, இவர்களுக்கு, அனுஷ்கா உள்ளிட்ட இரண்டு பிள்ளைகள் உள்ளனர். ராஜசேகர் மீது, காசிமேடு மீன் பிடி துறைமுகம், எண்ணூர் ஆகிய காவல் நிலையங்களில், வழிப்பறி, கொலை முயற்சி வழக்குகள் உள்ளன,

இந்த நிலையில், குற்ற வழக்கில் கைதான ராஜசேகர், சமீபத்தில் தான் சிறையில் இருந்து வெளியில் வந்தார், நேற்று முன் தினம் மாலை, கத்திவாக்கம், பக்கிம்காம் கால்வாய் அருகில் , நண்பர்கள் 5 பேருடன், ராஜசேகர் மது அருந்தினார், அப்போது, அங்கு ஏற்பட்ட தகராறில், ராஜசேகரை, அந்த கும்பல் ஓட ஓட வெட்டி கொலை செய்தனர்.

இதைத்தொடர்ந்து, எண்ணூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, ராஜசேகரை கைப்பற்றி, இந்த கொலையில் ஈடுபட்ட திருவொற்றியூர், கார்கில் நகர் கார்த்திக்(எ) புறா கார்த்திக்(23), அத்திப்பட்டு புது நகர், அம்பேத்கர் தெரு அப்துல் கரிம்(எ) கரிம்(22), மீஞ்சூர் சதீஸ்குமார்(எ) குட்டா குசுமி(20), எண்ணூர், வ.உ.சி நகர் அஜித்(22), ஜாகீர் உசேன்(எ) ஜாக்கி(20), தண்டையார் பேட்டை , சிவாஜி நகர் சூர்யா(24) , அரிஸ்(22) ஆகிய 7 பேரை கைது செய்தனர்.

ஏற்கனவே கார்த்திக்கும், ராஜசேகருக்கு முன்விரோதம் இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், கஞ்சா கேட்டு மிரட்டிய ராஜசேகர், அவர்களை ஆபாசமாக பேசியதால், ஆத்திரத்தில் கொன்றதாக , கைதான கும்பல்,போலீசில் வாக்கு மூலம் கொடுத்துள்ளது,

Leave a Reply

Your email address will not be published.