Police Department News

காஞ்சிபுரம் நெடுஞ்சாலைத்துறையின் அலட்சியத்தால் நடைபெறும் சாலை விபத்துகளை குறைக்க காஞ்சிபுரம் தாலுக்கா காவல்துறையே முன்னின்று காஞ்சிபுரம் – கீழம்பி புறவழிச் சாலையில் சிமெண்ட் சாலை அமைக்கும் நிகழ்வு வாகன ஓட்டிகள் உள்ளிட்ட அனைவரின் பாராட்டை பெற்றுள்ளது.

காஞ்சிபுரம் நெடுஞ்சாலைத்துறையின் அலட்சியத்தால் நடைபெறும் சாலை விபத்துகளை குறைக்க காஞ்சிபுரம் தாலுக்கா காவல்துறையே முன்னின்று காஞ்சிபுரம் – கீழம்பி புறவழிச் சாலையில் சிமெண்ட் சாலை அமைக்கும் நிகழ்வு வாகன ஓட்டிகள் உள்ளிட்ட அனைவரின் பாராட்டை பெற்றுள்ளது.

காஞ்சிபுரம் அடுத்த செவிலிமேடு பாலாற்று கரையோரம் செய்யார் மற்றும் வந்தவாசியிலிருந்து வரும் வாகனங்கள் வேலூர் செல்ல கீழம்பி புறவழிச்சாலை அமைக்கப்பட்டு நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வந்த நிலையில் பாலாற்றின் கரையோரம் வாகனங்கள் அதிக பாரம் ஏற்றிச் செல்வதால் சாலை வளைவு மிகுந்த சேதம் அடைந்து சில தினங்களுக்கு முன்பு இரு சக்கர வாகனத்தில் சென்றவரில் ஒரு பெண் சம்பவ இடத்திலேயே பள்ளத்தில் கவிழ்ந்து பலியானார்.

மேலும் இப்பகுதியில் நாள்தோறும் வாகன விபத்துக்கள் அதிகம் நடைபெறுவதாக காஞ்சிபுரம் தாலுகா காவல் துறையால் கணிக்கப்பட்டு அப்பகுதியை சீரமைக்கக்கோரி காஞ்சிபுரம் நெடுஞ்சாலை துறை அலுவலகத்திற்கு கோரிக்கை வைத்தனர்.

தற்போது போதிய நிதி இல்லை எனும் சீரமைக்க ஓரிரு நாட்கள் ஆகும் எனவும் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து காஞ்சிபுரம் தாலுகா காவல் துறையினரே வாகன விபத்துக்களில் பொதுமக்கள் , வாகன ஓட்டிகள் சிக்காமல் இருக்க அப்பகுதியை காவல்துறையினரே சிமெண்ட் கலவைகள் கொண்டு சாலை சீரமைப்பு பணியை மேற்கொண்டனர்.

வாகன விபத்துக்களை குறைக்கும் நோக்கில் சாலைகளை சீரமைத்த காஞ்சிபுரம் தாலுகா காவல் துறையினரின் மனிதாபிமான செயலை அப்பகுதி வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் பெரிதும் வரவேற்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வந்த நிலையில் சாலைகளை செப்பனிடும் பணியை தூங்காமல் நெடுஞ்சாலைத்துறை அவசியமாக இருப்பதால் அங்கங்கே வாகன விபத்துக்கள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.